பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

சர்வ சமயச் சிந்தனைகள்

கவலை)

அறிவுடையோர்க்கு ஐயமில்லை, அறமுடையோர்க்கு கவலையில்லை, துணிவுடையோர்க்கு அச்ச மில்லை.

கவலைக்கு இடந்தருமளவு மனிதப் பண்பினின்றும் விலகுகின்றோம். சி

கழிவிரக்கம்

தான்் தீமை செய்துவிட்டதை உணர்ந்து அதற்காகக் கழிவிரக்கம் கொள்பவன் அதன் பின்னர் அதைச் செய்யமாட்டான். பெள

அறங்களுள் எல்லாம் அழகு மிக்கது கழிவிரக்கம் என்ப தாகும். தா மரணத்துக்குத் தவிர மற்றைய எல்லாவற்றுக்கும் மருந் துண்டு. மறம் தவிர மற்றவை எல்லாம் நலம் பெறும் என்று நம்ப இடமுண்டு. அறம் தவிர மற்றவை எல் லாம் அழியும். கோபத்தைத் தவிர மற்றவை எல்லா வற்றையும் வென்று விடலாம். ஜா

வாலறிவனிடம் செய்த பாவங்களைச் சொல்லி இனிச் செய்வதில்லை என்று உறுதி செய்து கொள்பவனிட மிருந்து அவனுடைய பாவங்கள் அகன்று போகும்.

&m. தவறு செய்யாத தொண்ணுற்று ஒன்பது பேர்க்காக

மகிழ்வதினும், தவறு செய்து கழிவிரக்கம் கொள்ளும்

ஒருவனுக்காகவே தேவலோகத்தார் அதிகமாக மகிழ் வர்.

கழிவிரக்கம் கொண்டாலன்றி அழியவே செய்வாய்.

கழிவிரக்கம் கொண்டு மனமாற்றம் அடைவாய், உன் பாவங்கள் மறைந்து போகும்.