பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலே குறிப்பிட்ட முதல் இருவருக்கும் நல்ல கற்றறிந்த மாணாக்கர்கள் இருந்தபோதும் அவர்களின் பெயர்களால் சமயத்தை உண்டாக்கவில்லை. ஆனால் மற்றவர்களின் பெயரால் அவர்தம் தொண்டர்கள், அடியார்கள் சமயத்தை உண்டாக்கினார்கள். சமயமும் மதமும் ஒன்றல்ல. மதம் என்பது முதலில் கொள்கையைக் குறித்தது. பின்னர் ஒரு சில வெறியர்களால் பொருளை இழந்து மக்களை வீழ்த்தும் மத யானையாக மாறிற்று.

உண்மையான சமய உணர்வு மக்கள் முன்னேற்றத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இன்பத்திற்கும் ஒழுக்கததிற்கும் இன்றியமையாத தேவையாயிற்று. அச் சமயத்திற்குரிய தனிச் சிறப்பான இயல்புகள் அன்பு, இரக்கம், வாய்மை, தூய்மை, நல்லெண்ணம், மேலான உணர்வு ஆகியவை உள்ளுயிர்க்குதவும் வெறும் நம்பிக்கையாய் மட்டுமல்லாமல் நன்னடத்தைக்கு வழிகாட்டியாய் அமைந்து மானுட சமூகத்தை நல்வழிப்படுத்துகின்றன.

வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த சமய வாணர்களின் சால்புரைகளை அகர வரிசைப்படுத்தி நூலாகத் தொகுத்துத் தந்துள்ளோம். செங்கதிரும் வெண்கதிரும் மண்ணுலகில் ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு பெயர் பெற்றிருப்பதைப் போலப் பல்வேறு சமயங்களும் ஒரே உண்மையைத்தான்் உரைக்கின்றன. முன்னோர்கள் கூறியதுபோல ஆறுகள் பலவாயினும் சேருமிடம் கடலில் ஒன்றுதான்். கடலில் மூழ்கி முத்தெடுத்துச்சிந்தனைக் களியுங்கள். -

த.கோவேந்தன் 29.2.2OOO