பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 சலோம்

சிரியா இளைஞன் :

இளவரசி, இளவரசி ஐயோ!

சலோம் :

சோகனான், நான் என்ன செய்ய வேண்டும் சொல்லு!

வாய்திறந்து மீண்டும் பேசு.

சோகனான் :

சோடாம் புதல்வியே, என் அருகில் வராதே! முகத்தைத் திரையால் மூடிக்கொள். தலையிலே சாம்பலைத் தூவிக்கொள். பாலைவனத்திற்குப் போ. அங்கே, மனித குமாரனைத் தேடு.

சலோம் :

அவன் யார்? மனித குமாரன் யார்? உன்னைப்போல இவ்வளவு அழகாக இருப்பானா, சோகனான்?

சோகனான் :

அப்பால் போ அரண்மனையிலே காலதேவனுடைய சிறகு ஒலி கேட்கிறது.

சிரியா இளைஞன் :

இளவரசி, உங்களைக் கெஞ்சுகிறேன், உள்ளே போங்கள்.

சோகனான் :

தேவதூதர் வாளை வைத்துக்கொண்டு இங்கே என்ன

செய்கிறாய்? மாசு நிறைந்த இந்த அரண்மனையிலே யாரைத்

தேடுகிறாய்? வெள்ளி உடை அணிந்தவன் மாளப்போகும் நாள்

இன்னும் வரவில்லை.

சலோம் :

சோகனான்!