பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 32

கதிர்போல ஒளி வீசுகிறான். இன்னுங்கொஞ்சம் அருகேபோய் அவனைப்பார்ப்பேன்.

சிரியா வாலிபன் :

வேண்டாம், இளவரசி வேண்டாம். சலோம் :

அருகில் சென்று பார்ப்பேன்.

சிரியா இளைஞன் :

இளவரசி, இளவரசி!

சோகனான் :

என்னை உற்று நோக்கும் இந்த மங்கை யார்? அவள் என்னைப் பார்க்கலாகாது. சுடர் வீசும் இமைகளுக்கிடையி லிருக்கும் பொன்னிறக் கண்களால் அவள் என்னை ஏன் பார்க் கிறாள்? அவள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. போகச் சொல்லுங்கள். நான் பேச விரும்பும் பெண் அவளல்லள்.

சலோம் :

நான் மன்னி எரோதியாவின் மகள். சூதியா நாட்டு இளவ ரசி, என் பெயர் சலோம்.

சோகானன் :

தொலைவில்போ. பாபிலோன் குமாரியே, ஆண்டவன் தேர்ந்தெடுத்த தேவதூதன் அருகே வராதே, உன்னுடைய அன்னை, பாவங்களாகிய மதுவைப் நாநிலம் எங்கும் கொட்டி வைத்திருக்கிறாள். அந்தப் பாவங்கள் அழும் குரல், பெருந்திரு மகன் காதிற்கு எட்டிவிட்டது.

சலோம் :

சோகனான், பேசு மீண்டும் வாய் திறந்து பேசு உன்னுடைய குரல் மதுவைப்போல சுவையாயிருக்கிறது எனக்கு.

3