பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 48

மன்னன் :

உலகு காப்பவனா? அப்படி என்றால்? திசெல்லினசு :

அது சீசருக்கு வழங்கும் ஒரு பட்டம்.

மன்னன் :

ஆனால் சீசர் சூதியாவிற்கு வரப்போவதில்லை? நேற்றுத் தான் உரோமிலிருந்து மடல்கள் வந்தன. இது தொடர்பாக ஒரு சொல் அதில் இல்லையே! மாரி காலத்தின்போது உரோமில்

இருந்தாயே, திசெல்லினசு, சீசர் வருகையைப்பற்றி ஏதாவது கேள்விப்பட்டாயா?

திசெல்லினசு :

நான் எதுவும் கேள்விப்படவில்லை, அரசே! உலகு காப்பவர் என்பது சீசருடைய பட்டங்களில் ஒன்று.

மன்னர் :

சீசர் இங்கே வரமுடியாது அவருக்கு முடக்கு நோய் அதிகம். அவருடைய கால்கள் யானைக் கால்களைப்போல இருக் கின்றன என்று சொல்லுகிறார்கள். தவிர, அரசாங்க வேலைகள் இருக்கின்றன. அவர் வரமாட்டார். ஆயினும் அவர் தெய்வத் தன்மை வாய்ந்தவர். நினைத்தால் வரலாம், ஆனால் அவர் வரு வாரென்று நான் நினைக்கவில்லை. முதல் நாசரீன் :

முற்றுணர்ந்தோன், சீசரைப் பற்றிப் பேசவில்லை.

எரோத்து :

சீசரைப்பற்றி இல்லையா?

முதல் நாசரீன் :

ஆம், அரசே!