பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சலோம்

மன்னன் :

அவன் உன்னுடைய பெயரைச் சொல்லவில்லையே.

மன்னி :

அதனால் என்ன? அவன் என்னைத்தான் பழிக்கிறான் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும், நான் உங்களுடைய மனைவி இல்லையா?

மன்னன் :

ஆம், உண்மை, எரோதியாசு! என் அன்பே, நீ என் மனை விதான் அதற்குமுன், என் அண்ணனுடைய மனைவியாக இருந்தாய்.

மன்னி :

நீங்கள்தாமே அவரிடமிருந்து என்னைக் கவர்ந்தீர்கள்.

மன்னன் :

ஆம், எனக்கு வலிமை இருந்தது, அதுவே உண்மை,...சரி அதைப்பற்றிப் பேச வேண்டா. அதிலே எனக்கு விருப்பம் இல்லை. என் அன்பே, விருந்தாளிகளை நாம் நன்கு கவனிக்க வில்லையே! அறிவனின் கொடிய சொற்களால், பின்னால் ஒரு எதிர்பாராத துன்பம் நமக்கு வரலாம். இப்போது கிண்ணத்தில் மதுவை ஊற்று, சீசர் பெருமானுக்கு உடல்நலம் அருளவேண்டு மென்று மது அருந்துகிறேன்... உன் மகளைப் பார்த்தாயா, மிகவும் வெளிறி இருக்கிறாளே!

மன்னி :

அவள் எப்படி இருந்தால் என்ன, உங்களுக்கு?

மன்னன் :

இதுபோல ஒரு முறைகூட நான் அவளைப் பார்த்தது இல்லை.