பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 52

ளட்டும், நோயாளிகளை குணப்படுத்துவது எல்லாம் நல்லது தானே! ஆனால், செத்தவர்களைப் பிழைக்க வைக்க விட மாட்டேன். நான், மாண்டவர்களை மீண்டு வருவது, அச்ச முட்டுவது, மிகபெரு அச்சம்!

அறிவனுடைய குரல் :

பரத்தையே, விலை மகளே, பொன் விழிகளையும் பொன்-வெள்ளி இமைகளையும் உடைய, பாபிலோன் குமா ரியே! உன்னைப்பற்றி ஆண்டவன் என்ன சொல்லுகிறான், கேட்டாயா? 'ஏராளமான மக்கள் கூடட்டும், அவள் மீது கற்கள் வீசட்டும்'.

மன்னன் :

அவனுடைய வாயை மூடுங்கள்.

அறிவனுடைய குரல் :

படைத் தலைவர்கள் தங்கள் உடைவானை உருவி அவனைக் குத்தட்டும். கேடயங்களுக்கு இடையில் அவளை வீழ்த்தட்டும்.

மன்னி :

இது அவதூறு, குற்றம், பெரும்பழி.

அறிவனுடைய குரல் :

இவ் வகையான, உலகத்திலுள்ள முறைகேட்டையும் தீமை யையும் ஒழிக்கப் போகிறேன். அவளைப் பார்த்து மற்ற பெண்களும் கெட்டுப்போக விடேன்.

மன்னி :

பார்த்தீர்களா, என்னைப்பற்றி அவன் என்ன சொல்லுகிறா

னென்று. நான் உங்களுடைய மனைவி அன்றோ? என்னைப் பழிக்கும்போது பேசாமல் இருக்கலாமா?