பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்டின் சிந்தனைகள்

கலை ஒரு சின்னம்; ஏனெனில், மனிதனும் ஒரு சின்னம்தான். கலப்பில்லாத சுய வளர்ச்சியே, கலை மண்டிய வாழ்க்கையாகப் பரிமளிக்கும். சித்திரக்காரனுக்கு, உலகம் ஒரு கண்காட்சி; கவிஞனுக்கு, உலகம் ஒரு பாடல்; கவிஞன் பாடியே தீருவான்; சிற்பி வெண்கலத்திலே சிந்திக்கிறான்; சித்திரக்கார னுக்கு, தன் மன நிலைகளைக் காட்டும் கண்ணாடியாகவே உலகம் அமைந்து விடுகிறது.

சொல்லிலோ, வருணத்திலோ, இசையிலோ, சலவைக் கல்லிலோ, மனிதனும் அவனுடைய அரிய இலட்சிய உபதே சமும் மின்னிப் பொலிவுற்றே வெளிவருகின்றன.

女 女 女

கலைஞன் வாழ்க்கையிலே, இயற்கையான எழில் இன்பம் ஊட்டி, அவன் வாழ்க்கையை உயிரோவியமாகவே மாற்றிவிடு கிறது. சூரியனும், சந்திரனும், பருவ எழிலும், இரவின் அகண்ட மெளனமும், காலைப் பட்சி ஜாலங்களின் இசையும், இலைகளி னூடே கொட்டுகின்ற மழையும், புல்லின்மேல் தவிழ்ந்து வரு கின்ற வெள்ளிப் பணித்துளிகளும், கலைஞனுக்கு அபூர்வமான இன்பத்தையும், சக்தியையும் ஊட்டுகின்றன. இயற்கையின் அழகை மறந்து வாழ்வது சரியல்லவே!

女 女 女

ஷேக்ஸ்பியர், விக்டர் ஹாகோ, தாந்தே, வால்டர் பேட்டர் எல்லோரும் சிறந்த கலையாவேசம் கொண்ட இலக்கிய மேதைகள்; வாழ்க்கையையும், இயற்கையையும், கலையையும், தத்துவத்தையும் புதிய முறையில் அருளாவேசத்துடன் சிருஷ்டி செய்திருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துகளிலே, சிந்தனை மின்னலிலே, கவிதையின் திருக்கோலத்திலே, தியாக விளக்கத்