பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போகப் இத்தளர்ச்சி வளர்ச்சி பெற்று சாதித் தவிர்ப்புணர்வுகள் மிகலாம். அதன்பின் சாதியழிவுகள் தோன்றிப் படிப்படியாக ஒழிய வேண்டியதுதான். ஆனால் நம் முயற்சிகளுக்கெல்லாம் பெருந்துணையாகத் தமிழ் மொழியை வளர்ப்பதும் அதன் வழித், தமிழுணர்வை - நாமெல்லாம் ஒரே தமிழின மரபினரே என்றெண்ணும் நினைவை வேரூன்றச் செய்வதும் மிக மிக இன்றியமையாதனவாகும். ஆங்காங்குள்ள தமிழறிஞர்களும், தமிழிளைஞர்களும், அன்பர்களும் ஒன்றுகூடித் திட்டமிட்டுப் பார்த்தசாரதிகளுக்கு நேர் எதிர் வினைகளில் இறங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

தென்மொழி, சுவடி-16; ஒலை-10. 1980

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/58&oldid=1164392" இலிருந்து மீள்விக்கப்பட்டது