பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'ஆதி திராவிடன்' என்பது வரலாற்றுப் பிழை !


'அரிஜன்' என்பது காந்தியின் ஏமாற்று!
'தாழ்த்தப்பட்டவன்' என்பது தன்மானமின்மை !
‘தலித்’ என்பது தமிழின இழப்பு !
'பழந்தமிழன்’ என்பதே சிறப்பும் பெருமையும் !
'ஆதி ஆந்திரன் ஆதிகன்னடன் ஆதிகேரளன்
- என்று பிறர் தம்மைச் சுட்டும் பொழுது, -
'ஆதி(பழந்) த்தமிழன்’ என்பதே சிறந்தது!

தமிழ்க்குடி மக்களுக்குப் பாவலரேறுவின் அறிவுரை !

தமிழர்களைத் திராவிடர் என்று அழைப்பது மொழியியல் படியும் இனவியல் படியும் வரலாற்றுத் தவறானது என்பதையும், தமிழிலிருந்து சமசுக்கிருதத் தொடர்பால் பிரிந்த ஏனைய தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய மொழிகளே திராவிட மொழிகள் என்பதையும், அவற்றைப் பேசுபவரே திராவிடர்கள் என்பதையும் முந்தைய தமிழ்நிலம் (167,168) இதழ்களில் எடுத்துக் கூறினோம். அஃதாவது 'திராவிடம்' என்னும் சொல் தமிழ் மொழியை ஆரியர்கள் ஒலியியல் மாறுபாட்டுடன் குறித்த சொல். ஆனால் அதை மொழி வரலாறு எழுதிய அறிஞர் கால்டுவெல் அவர்கள் தமிழ் தவிர்த்த ஏனைய மொழிகளைக் குறிப்பதற்கு ஒரு மொழியியல் குறியீட்டுச் சொல்லாகவே பயன்படுத்தினர். அதே போல, தமிழர்கள் வடபுலம் சென்று வாழ்ந்து பரவியிருந்த பொழுது, ஆரியர்கள் அவர்களை மூலத் தமிழினத்திருந்து வேறு பிரித்துக் காட்ட திராவிடர்கள் என்று வரலாற்றாசிரியர்கள் குறிக்க வேண்டியிருந்தது.

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/70&oldid=1164599" இலிருந்து மீள்விக்கப்பட்டது