பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

வழித்துணையாவதும் அதுவே. ஆகவே, அன்றறிவாம் என்னுது அறம் செய்யும் ஆக்கவழியில் செல்லுக நின் உள்ளம்' என உரைத்தாள்.

மனம் தெளிய, விசாகை உரைத்த மாற்றங்களைக் கேட்ட ன் தருமதத்தன். அவன் மனத்தைப் பற்றி வருத்திய மனவேட்கை அகன் றது. அறத்தாற்றில் சென்றது அவன் உள்ளம்; உடன் கொணந்த வான் பொருளே விசாகையால் ஒப்படைத்தான். இருவரும் கூடி, எண்ணிலாப் பேரறங்கள் பல புரிந்து பாரோர் போற்றப் பெருவாழ்வு வாழ்ந்தனர்.

மாணமே பெரிதென மதித்து, மணத்தை வெறுத்து, இளமைப் பருவத்து இன்பவுணர்வை அடக்கித் தன்னக் காத்துக் கொண்டதோடு, ஆண்டு அறுபதினுக்கு மேற் பட்டும், ஆசைகளை அடக்கமாட்டாது தன்னை அடைந்த தன் பழங் காதலனைப் பற்றி வருத்தும் பாசவலைகளை அறுத்து, அவனேயும் காத்து, தனக்கும், தன் கணவனல்ல குயினும் தன்னை மணக்கும் உரிமையும் உள்ளமும் உடையவயை தருமதத்தனுக்கும் நேர விருந்த பழியுரை களைப் போக்கிப்புகழை நிலைநாட்டி, "தற்காத்துத் தற் கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்வி லாள் பெண்' என்ற வள்ளுவர் வகுத்த அறத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டிய விசாகை வாழ்க! அவள் புகழ் பாரெங்கும் பரவுக!