பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#10

தன் மனங்கவர்ந்த விசாகை இருந்து வாழும் புகார் அடைந்தான். அன்று சென்ற அத்தான் பிறந்த பேரூர்க்கு மீண்டான் என்பதை விசாகை அறிந்தாள். கன்னி மாடத்தை விட்டு வெளிவந்து அவனை வரவேற் அருள். தவவாழ்க்கையால் அவள் உள்ளம் தூய்மை -யடைந்துளது. அறனல்லன அறியாநெறி முறையால் அவன் உள்ளமும் தூய்மை வாய்ந்து திகழ்கிறது. இந் திலையில், ஒருவரையொருவர் காண்பதைக்கண்டு உரை :பாடுவதை உலகோர் பழியார் என உணர்ந்தாள் விசாகை அதனுல் பலரும் காணத், தருமதத்தனைச் சென்று கண்டாள். அடையாளம் தெரியாதவாறு ஆண்டால் முதிர்ந்த அவன் உருவைக் கண்ணுற்ருள். பின்னர் அவன் உட்கருத்தை அவன் உரைக்க உணர்ந்தாள். உடனே, 'அன்ப! அன்று, ஒருவரையொருவர் கண்டு, காதல் கொண்டு கருத்திழந்து போனதற்குக் காரணமா யிருந்த நம் கவின், இன்று நம்மைவிட்டு அகன்று. விட்டது. ஒருவரை யொருவர் கண்டு கொள்ளவாறு, நம் உருவம் மாறுபட்டுவிட்டது. அறுபது ஆண்டுகளைக் கழித்துவிட்டாய் நீ; நறுமணம் வீச, ஐவகை வனப்பும். விளங்க வாரி விடப்பெற்ற என் கூந்தல் நரைத்து விட்டது. இளமை எங்கோ சென்று மறைந்தது. இன்ப வுணர்வுகளுக்கு உள்ளத்தில் இடம் இல்லை. ஆகவே, அன்ப நின்வாழ்க்கைத் துணையாகி உன் வேட்கையை நிறைவேற்றல் இப் பிறப்பில் இயலாது. வரும் பிறவியில் நின் அடித்தொழில் கேட்கும் அன்புடையளாவேன். அன்ப இளமை நில்லாது; யாக்கை நிகல்யாது; வற்ருப் பெருநிதி என வாயாரப் போற்றப் பெறும் வான் நிதியும் நில்லாது; புத்தேள் உலக இன்பத்தைப் புதல்வர்களும் தரவல்லரல்லர். அதை அறம் ஒன்றே அளிக்கவல்லது. அதுவொன்றே நிலைபேறுடையது. வரும் பிறவிக்கு