பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

மறந்தான்; கடமையில் ஆழ்ந்துவிட்டான். தன்குல வொழுக்கையொட்டி வாணிகவாழ்க்கையை மேற்கொண் டான். கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல், தன் பொருளையும் பிறர் பொருளையும் ஒப்ப மதித்து வாணிகம் புரிந்தான்; அவன் வாழ்வில் வளம் கொழித்தது. மதுரைப் பேரரசின் மன்னர் மன்னனும் மதிக்கும் மாநிதிக்குரியளுைன். தருமதத்தனின் வாணிக அறம் பிறழா வாழ்வும், வற்ருப் பெருநிதியும் கண்டு. அரசன் அவன்பால் அன்புகொண்டான். அரசவைக்கு அழைத்து எட்டி எனும் பட்டமும், அதற்குரிய எட்டிப் பூவும் அளித்துப் பெருமை செய்தான்.

வாணிகவாழ்வில், அதன் வளர்ச்சியில் கருத்துடைய ளுய்த், தருமதத்தன் வாழ்நாளைக் கழித்து வந்தான். அவன் வாளுட்காலத்தில் அறுபது ஆண்டுகள் கழிந்து விட்டன. ஒருநாள் அவன் மனை புகுந்த அந்தணன் ஒருவன், தருமதத்தன் மனை வாழ்க்கைதரும் மாட்சி யிழந்தவளுதல் அறிந்தான். வான் நிதி படைத்து, வரையாது வழங்கி அறம் பல ஆற்றும் தருமதத்தனுக்கு மனக்குரிய மங்கலம் இன்மை அறிந்து மனங் கலங்கி, *மா நிதிக் கிழவா! வாழ்க்கைத்துணை இன்றி, நீ ஆற்றும் பேரறம் எண்ணிலாதன ஆயினும் அவை தமக்குரிய பயனை உனக்குத் தாரா, பத்தினி இல்லோர் பல அறம் புரியினும், புத்தேள் உலகம் புகார்; ஆகவே கழிந்ததை . மறந்து, காவிரிபபூம்பட்டினத்திற்கு இப்போதே விரைந்து சென்று, விசாகையை வரைந்து வான்புகழ் பெறுவாயாக' எனக் கூறி, மனே வாழ்க்கையின் மாண்பினை அவன் உளம்கொளச் செய்தான்.

அந்தணன் கூறிய அறிவுரை, தருமதத்தனின் அகத் திருகள் அகற்றியது. அவன் அன்றே மதுரை நீங்கி,