பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F08

உனக்கு மனமகிழ்ச்சி அளிக்கும் பேறு எனக்கு இப்பிறவி யில் வாய்த்திலது. இப்பிறவியில் இவனை மணவேன்; மறுபிறப்பில் மணந்து மகிழ்வேன்” என உரைத்தாள். :உரைத்ததோடு நில்லாது, அன்றே கன்னித்தவம் மேற் கொண்டு விட்டாள்.

வெறுத்து அறம் நோற்கும் விசாகையின் முடிவு, தருமதத்தனுக்குத் தாங்கமாட்டா மனத்துயர் அளித்தது. தன் காதற்கோட்டை தகர்ந்துவிட்டது கண்டு கலங்கிக் கண்ணிருகுத்தான். க ச த லி ைய க் காணமாட்டாது காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ அவன் விரும்பவில்லை. அவ்வூர் வாழ்க்கையையே வெறுத்துவிட்டான் அவன். பிறந்து வளர்ந்து விளையாடிப் பேரின்பம் நுகர்ந்த மாநகரை மறந்து மதுரை செல்லத் துணிந்தான். புகார் நகரைவிட்டு நீங்குமுன், ஊரம்பலம் அடைந்து, தன் காதலிக்கு நேர்ந்த களங்கத்தைக் களைந்த கந்திற் பாவையை வணங்கி வாழ்த்தி விடைகொண்டான். பின்னர்ப் பெற்றதாயோடும், தந்தையோடும் புகார் நகரை வலம் வந்து வாயில் கடந்து வெளிப்பட்டான்.

மூவரும் மதுரை அடைந்தனர். மதுரை மாநகரத்து மங்கையருள், மனம் விரும்பும் ஒருத்தியை மணங்கொள் வான் மகன் என எண்ணி, அதற்காம் காலத்தை எதிர் நோக்கியிருந்தனர், தருமதத்தன் தாயும் தந்தையும். ஆளுல் அவன் உள்ளம், அவன் காதலியின் நினைவில் நிலைபெற்றிருந்தது. அவள் விரித்த பூங்குழலின் வனப் வில் வேட்கையுற்றுப்போன அவ்வுள்ளத்தை வேறு ஒருத்திபால் ஒப்படைத்தல் அவளுல் இயலாதாயிற்று; இப்பிறவியில் விசாகையை அல்லது வேறு மகளிரை இனத்தாலும் திண்டேன்.என உறுதி பூண்டான். காதல்