பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

ஆசைக் கடலில் ஆழ்ந்து கருத்திழந்து கிடந்தது: அதல்ை விசாகையை, வனப்புமிக்க அவள் வடிவைக். கண்ணுற்றதும், காவலன் மகனுக்கு வெறி தலைக்கேறி, விட்டது. அவளை அணுகினன். 'மலர்மாலை சூட்டி மணங்கொள்வதும், ஒரு மனமுறையாம்; பண்டையோர்: பாராட்டிய பெருமையும் அம் முறைக்கே உண்டு; விசாகை! அம்முறையில் மணந்து கொள்ள விரும்பு கிற்ேன்” எனக் கூறியவாறே, அவள் கழுத்தில் சூட்ட, கறுத்துத் திரண்ட தன் குடுமியில் கிடந்த மலர் மாலை யைக் கழற்றக் கைகளைக் கொண்டு சென்ருன். அவ்வளவே. சென்ற கைகள் சென்றனவே. எவ்வளவு, முயன்றும், எத்தனை முறை முயன்றும், எடுக்க முடிய வில்லை; குடுமியோடு குடுமியாக ஒட்டிக்கொண்டன. செய்தி ஊர்முற்றும் சென்று பரவிற்று. காவலன் அதைக் கேட்டான். தன் மகனின் ஒழுக்கக்கேட்டை உணர்ந்: தான். மகன் படும் துயர் மன்னவன் மனத்தை உறுத்த. வில்லை. மங்கை யொருத்திக்கு மனத்துயர் அளித்து. தன் ஆட்சிக்கு மாசுண்டாக்கியமாபெரும் பழியே அவன் மனத்திரையில் படிந்தது, ஊர்க்காவலரை அனுப்பி, மகனைக் கொலேக் களத்திற்குக் கொண்டு வாளால் வெட்டி வீழ்த்தின்ை. -

மாநகர் மக்கள் கற்பித்துக்கூறிய மாசுரை கேட்டே மனங்கலங்கிய விசாகை, மன்னன் மகனின் செயல். கண்டு மேலும் கலங்கிள்ை; அவள் மனம் மணவாழ்க் கையை வெறுத்தது. தெய்வம் துணை வந்தில்தாயின், என்பால் இவ்வூரார்கொண்ட மாசு தீர்ந்திராது. ஆகவே, மணவாழ்க்கை வேண்டேன் என மனத்தில் உறுதி பூண் டாள். பெற்றுப் பேணி வளர்த்த தாயைப் பணித்தாள். 'தரயே மைத்துனன மணந்து மணவாழ்க்கையேற்று.