பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

அவ்வலருரையைக் கேட்டு வாளாயிருக்க முடியவில்லை; ஒவியத்து எழுதுவொண்ணு வுருவத்தினளாய் அவள் அவ்வுரை கேட்டதுமே வீட்டைவிட்டு வெளிப்பட்டாள்; விரைந்து ஊரம்பலம் அடைந்தாள்; கந்திற்பாவை முன் சென்ருள். வருபொருள் உரைக்கும் பெரும் புகழ்மிக்க பாவாய்! என் ஒழுக்கத்தை உலகோர் பழிக்கின்றனர்; நான் அதைப்பொறேன்; எனக்கு நேர்ந்த அவ்விழிவைப். போக்குதல் உன் கடன். பழி போக்கிப் பேணும். வண்ணம், பாவாய்! நின்னைப் பணிகிறேன்; பரவுகிறேன்” என முறையிட்டு நின்ருள். -

விசாகையின் வேண்டுகோள் கந்திற்பாவையின் காதுகளிற் சென்று பாய்ந்தது. உடனே அப்பாவை வாய் திறந்து, விசாகையைப் பின்தொடர்ந்து வந்து, ஊரம்பலத்தின் முன் குழுமி நிற்கும் மாநகர்மக்கள் கேட்கு மாறு, 'மா நகர் உள் ளிர், இம்மங்கை மனமா சுடையாளல் லள்; மாருக, மழையையும் மண்ணுலகிற்குக் கொண்டு வரும் மாபெரும் கற்புடைய கன்னியாவள்’ எனத் தன் நான்ால், அவளை நாவாசப் புகழ்ந்தது. அதுகேட்டு அவள் பால் கொண்ட ஐயம் நீங்கி அவளைப் போற்றினர் அவ்: ஆரார். - -

பரவையால் பழி நீங்கப்பெற்ற விசாகை, பலர் சூழ்ந்து வர, தன் மனநோக்கி மாநகர் வீதியில் சென்று கொண் டிருந்தாள். அப்போது அவள்முன் வந்த மன்னனின் மூத்தமகன் அவளைக் கண்டான். அவள் ஒழுக்கம் கெட்டவள் என ஊரார் பண்டு உரைத்த சொல்லைக் கேட்பவன் அவன், ஊரம்பலம் ஏறி, தான் உள்மாசு அற்றவள் என்பதை ஊரறிய உணர்த்தி வருகிருள் श्रवृद्ध த அவன் அறியான் ம்ேலும் அவன் உள்ள்ம்