பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. விசாகை

அகத்தியரை வேண்டிக் காவிரியாற்றைக் கொண்டு வந்த காந்தன் எனும் சோனட்டுக் காவலன், வேந்தர் குலத்தை வேரறுப்பேன் என வஞ்சினம் உரைத்துவரும் பரசுராமனுக்கு அஞ்சி கன்னித் தெய்வத்தின் கட்டன் யேற்று ஆட்சிப் பொறுப்பைத், தன் காதற்கணிகையீன்ற மகன் ககந்தன்பால் ஒப்படைத்து மறைந்துவிட்டான். காவிரிப்பூம்பட்டினத்தைக் ககந்தன் காத்துவந்தான். அக்காலத்தில் அவ்வூரில், வேந்தரும் மருளும் வளங் :கொழிக்கும் வணிகர் குடியில் தருமதத்தன் எனும் இளைஞன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் மாமனுக்கு விசாகை எனும் பெயர்பூண்ட மகள் ஒருத்தி யிருந்தாள். விசாகை வனப்பில் மிகுந்தவள்; அன்பையும் அருளேயும் அள்ளி வீசும் அவள் கண்ணுெளி.

தருமதத்தனும், விசாகையும் ஒத்த பருவத்தினர்; ஒருவரையொருவர் மணக்கும் முறைமையும் உடையவர்; மேலும் உளம் ஒன்று உடல் இரண்டு என உரைக்குமாறு ஒன்று கூடி விளையாடும் வழக்கம் கொண்டிருந்தனர். அவர் அழகுத் திருவுருவம் அவ்வூரார் கண்களைக் கவர்த் தது. அதன் விளைவு, தருமதத்தனும் விசாகையும் கன்னிப் பருவத்தைக் கடந்தனர்; காதல் மணங்கொண்டு களவின் பத்தில் ஆழ்த்துவிட்டனர்' என ஊரில் அலர் எழுத்து பரவிற்று.

தன் மனத்துய்மைக்கு மாசுகற்பித்து ஊரார் உரைம் அதை விசாகைகேட்டாள். மானமே உயிர் என மதிக் கும் மாண்பு மிகுந்தவள் அம்மங்கை நல்லாள். அவுளால்