பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

சிலவற்றைப் பற்றுக் கோடாய்க் கொண்டு கடலே நீந்திக் கடப்பதில் முனைந்தனர் சிலர்.

ஆதிரை கணவன் சாதுவன் கையில், ஆதிரை ஆற்றிய அறப்பயனால் ஒடிந்த கொடிமரத்தின் ஒரு துண்டு அகப்பட்டது. அதை அவன் இறுகத் தழுவிக் கொண்டான். மலைபோல் எழுந்து மடுப்போல் அடங்கும் அலைகளிடையே அகப்பட்டு எல்லையில்லா அல்லல் அடைந்தான். இறுதியில், அவனை அவன் அணைத்துக் கிடந்த கொடிமரத் துண்டோடு, அவ்வாழ் கடலிடையே யிருந்த ஒரு மலைத் தீவின் கரையிற் கொண்டு சென்று ஒதுக்கிற்று அக்கொடுங் கடல். கடல் நீரிலும், கொடிய புயற் காற்றிடையிலும் அகப்பட்டு அலைக்கழிக்கப்பெற்று உற்ற நோய் மிகுதியால், சாதுவன், அத்தீவின் கரைக் கண் ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தின் நிழலில், உடல் சோர்ந்து, உணர்விழந்து வீழ்ந்து உறங்கிவிட்டான்.

கடல் வாணிகம் கருதிக் கலம் ஊர்ந்து சென்ற கணவன், வற்ரு வளம்பெற்று வந்து சேர்வன் என்ற இன்ப நினைவால், மனமகிழ்ச்சியால் நிறைந்து வழிய, சாதுவனே எதிர் நோக்கியிருந்தாள் ஆதிரை! ஒரு நாள் ஒருசிலர் ஓடிவந்து, ‘ஆதிரை! உன் கணவணோடு கலம் ஏறிச் சென்றவர் ஊர் வந்து சேர்ந்து விட்டனர்’ என்று அறிவித்து அகன்றனர். கடலில் வீழ்ந்தவருள், சாதுவனைப் போலவே வேறு சிலரும் உயிர் பிழைத்தனர். அவருட் சிலர், எங்கெங்கோ அலைந்து இறுதியில் ஊர் வந்துசேர்ந்தனர். அஃதறிந்த ஆதிரை விரைந்து அவர்கள் பாற்சென்று தின் கணவனைக் குறித்து உசாவினாள்.

கலம் கவிழ்ந்தது இரவில்; அதுவும் எல்லாரும் உறங்கிக் கிடந்த இடையாமத்தி லாதலாலும், கடலி