பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

உயர்வளிக்கும் நான்மறைகளை அளித்த ஆசிரியப் பெரு மக்களாகிய வசிட்டர் அகத்தியர் இருவரும், கடவுட் கணிகையாய திலோத்தமைக்குப் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டீர்களோ? மறையோர் குலத்தின் மாண்பு இதுவாகவும், என்னேப் பெற்ற சாலிக்குப் பிழை கற்பிக்கும் உம் பேதமையை என்னென்பேன்” எனக் கூறி எள்ளி நகைத்தான்.

அந்தணர் வாயடங்கினர்; ஆயினும் அவர் ஆணவம் ஆபுத்திரன் கூறிய அறிவு விளக்கங்களை அறிந்து அவனை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து விட்டது. அந்நிலையில் அங்கு வந்த இளம் பூதியும், தன் பிறப்பை ஆபுத்திரன் தானே எடுத்துரைக்கக் கேட்டான்; அந்தணர் குலத்திற்கு ஏற்றவனாகன் இவன் என அவனும் கருதி ஆபுத்திரனைக் கைவிட்டான்.

ஆபுத்திரனை ஆங்கே விடுத்து அந்தணர்கள் தம்மூர் அடைந்தனர். ஆபுத்திரன் செல்லிடம் அறியாது சிறிது பொழுது திகைத்தான். பின்னர்ப் பார்ப்பார்க் கேற்றதாய பிச்சையேற்றுண்ணும் வாழ்க்கை மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்று பிச்சையேற்றான். அவன் அறிவும் ஒழுக்கமும் அறிந்த மக்கள், அவனுக்கு மகிழ்ந்து உணவிட்டனர். ஆனால் அந்தணர் வாழும் சேரிகளில் அவன் அல்லற் பட வேண்டியதாயிற்று. அவன் வரலாறு அறிந்த அந்தணர்கள், “ஆ கவர்ந்த கள்வன்” எனக் கூறிப் பழித்து, அவன் பிச்சைப் பாத்திரத்தில் கல்லிட்டுக் கொடுமை செய்தனர்.

இவ்வாறு ஊர் ஊராக அலந்து இறுதியில் மதுரை வந்தடைந்தான். ஆங்குச் சிந்தாதேவி என வழங்கப்ஆ.-3