பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பெறும் கலையின் செல்வி வீற்றிருக்கும் கலைக்கோயில் முன்னிருந்த மன்றத்தை வாழிடமாகக் கொண்டான். மதுரை வீதிகளில் புகுந்து, மாசற்றோர் வாழும் மனைகள் தோறும் சென்று பிச்சை ஏற்றான்; ஏற்றுப் பெற்ற உணவில், பெரும் பகுதியைக் கண்ணொளி இழந்தவர், காது கேட்காதவர், கால்முடம் பட்டவர், பேணத்தக் கோரைப் பெறாதவர், பிணியால் பற்றப்பெற்றோர் ஆகியோர்க்கு அளித்துவிட்டு, எஞ்சியதைத்தான் உண்டு, இரவில், ஓட்டைத் தலைக்கீழ்க்கொண்டு உறங்கிக் காலங் கழித்து வந்தான்.

ஒரு நாள் இரவு பெருமழை பெய்து கொண்டிருந்தது. இடையாமம் வந்துற்றது. அப்போது சிலர் ஓடி வந்து ஊரம்பலத்துட் புகுந்தனர். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஆபுத்திரனே எழுப்பினர், அவன் அடியில் விழ்ந்து வணங்கி, ‘வயிறுகாய் பெரும்பசியால் வாடுகிறோம்; உயிர், வாழ உணவளியுங்கள்’ என வேண்டி நின்றனர். அவர்கள் நிலைகண்டு இரங்கினான் ஆபுத்திரன். ஆனால், அவர்க்கு அப்போது ஏதும் அளிக்க முடியாத தன்நிலைக்கு வருந்தினான். பிச்சையேற்று வந்ததை அளிப்பதல்லது, பொருளீட்டி வந்ததை அளித்தறியான் அவன். அவ்வாய்ப்பு அவனுக்கு இல்லை. அதனால், பசியால் வருந்துவோர்க்கு உதவ மாட்டாமை கண்டு உள்ளம் துடித்து உறுதுயர் உற்றான்.

ஆபுத்திரன், இரப்போர்க்கு ஈயமாட்டான் ஆயினும், ஈயத் துடிக்கும் அவன் உள்ளத் தூய்மையை, ஆங்குக் கோயில் கொண்டிருந்த சிந்தாதேவி கண்டாள். அவனுக்கு உதவ முன் வந்தாள். “ஆபுத்திர! வருந்