பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1. ஆதிரை

பொன்வளம் சிறந்தது பழந்தமிழ்நாடு; அப் பொன் வளம் அந்நாட்டின் நன்செய்கள் அளித்த செந்நெல் வளத்தால் வந்தது. அந் நன்செய்கள் நிறைவளம் தர நற்றுணை புரிந்தன. அந்நாட்டில் பெருக்கெடுத்தோடிய பேராறுகள்.

அப்பேராறுகளில் தலைசிறந்தது காவிரி. தான் பாயும் தஞ்சைப் பெருநாடு, அந்நெல் வளத்தை நிறையப்பெற்று, தென்னாட்டு நெற்களஞ்சியம் என்ற சிறப்புப் பெயரைப் பெறச் செய்த பெருஞ் செயலால் அக் காவிரி, பொன்னி எனும் புகழ்சால் பெயர்பெற்றுத் திகழ்ந்தது.

அக்காவிரியாற்று நீர் கடல்நீரோடு கலக்குமிடத் தில் அமைந்த பேரூரே புகார். பொதுவாக, ஆறுகள் கடலோடு கலக்குமிடங்கள் எல்லாம் புகார் எனவே அழைக்கப்பெறும். என்றாலும், காவிரி கடலோடு கலக்குமிடம் ஒன்றையே புகார் என்ற பெயரால் பழந்தமிழ் மக்கள் அழைத்தனர். புகார், பழைய தமிழ்நாட்டின் முதுபெரும் நகர்கள் அனைத்தினும் நனிமிகப் பழமை உடையது. பிற நகர்களுக்கில்லாப் பல சிறப்புக்களை அது பெற்றிருந்தது. உலகின் பல்வேறு பேரூர்களிலும் வாழும் மக்கள் வறுமையுற்றுப்போன தம் வாழிடம் விட்டு வந்து வாழ்ந்து, வாழ்வுபெறும் விழுச்சிறப்பு புகார் நகர்க்கு உண்டே அல்லது, புகார் நகரத்து மக்கள் வாழிடம் தேடி வேற்றுச் செல்லும் இழி நிலை என்றும் உண்டானதில்லை எனப் பாராட்டியுள்ளனர் புல்வர் பெருமக்கள் “சோழன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/7&oldid=1252973" இலிருந்து மீள்விக்கப்பட்டது