பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மூதூர்ப் பேராச் சிறப்பின் புகார்,” “பதியெழுவறியாம் பழங்குடி கெழீஇய, பொதுவறு சிறப்பின் புகார்” என்பன அப்பாராட்டுரைகளுள் ஒரு சில.

பொன்வளமும் பொருள்வளமும் அளித்த புகழோடு பிறிதொரு பெரும்புகழையும் புகார் பெற்றிருந்தது; புகார் நகரத்து நங்கையர் கற்பிற் சிறந்த காரிகையராய் வாழ்ந்தனர். கற்புக் கடவுள் எனக் கன்னியர் பலராலும் ஒருசேரப் புகழப்பெறும் கண்ணகி பிறந்த ஊர் அப்புகார் நகரே ஆகும். அதுமட்டுமன்று. அக் கண்ணகியாகிலும் பாராட்டி வழிபடத்தக்க பத்தினிப் பெண்டிர் பலரும் அப் புகார் நகரில் வாழ்ந்தோரே ஆவர்.

தன் வாழ்வு களங்கமற்றது, கற்புநெறியோடு பொருந்தியது என்பதற்குச் சான்று பகர, தான் மணங் கொண்ட இடத்தில் இருந்த வன்னிமரத்தையும், அதை யடுத்திருந்த கோயிலையும் தன் தமர்முன் வரவழைத்துக் காட்டிகுள் ஒரு காரிகை.

காவிரிக்கரையில் மணற்பாவை பண்ணி ஆடிக் கொண்டிருக்குங்கால், உடன் ஆடும் ஆய மகளிர், ‘ஏடி இம்மணற்பாவையே உன் மணுளனும்’ எனவுரைத்த நகைமொழியை உண்மையெனக் கொண்டு, அப்பாவையைத் தன் கணவகைவே கருதித், தன் கணவனும் அப்பாவையை ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போகாவாறு காக்கும் கடமையுணர்வால் வீட்டு நினைவையும் இழந்து, அதை அணைத்துக் கிடந்தாள் ஓர் ஆரணங்கு.

காவிரிப் புதுவெள்ளத்தில் புகுந்தாடிய தன் கணவனைக் காவிரிவெள்ளம் ஈர்த்துக்கொண்டு போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/8&oldid=1252974" இலிருந்து மீள்விக்கப்பட்டது