பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

ஒர் இடத்தில் ஒருங்கே கூட்டிக் காண்பது அரிதினும் அரிதாம். அச்செயற்கரும் செயலைச் செய்து காட்டிய சம்பாபதியின் திறம் கண்டு, மயன் எனும் தேவதச்சன் வியந்தான். அக்கடவுளின் புகழ், புகார் நகர் உள்ளள வும் நின்ருேங்கச் செய்யவல்ல நல்ல நினைவுச் சின்னம் ஒன்றை, அச்செயல் நிகழ்ந்த இடத்தில் நிறுவ எண்ணிஞன். உடனே அவன் ஆற்றலால், மேருமக்ஸ், அம் மலேயைச் சூழ்ந்து நிற்கும் ஏழு சிறு மலைகள், எண் ணிலாச் சிறு சிறு தீவுகள் சூழ விளங்கும் நாற்பெரும் தீவுகள், ஆங்கு வாழ் உயிரினங்கள், அவற்றின் இயல்பு கள் ஆகிய இவற்றை ஆங்காங்கு உள்ளவாறே விளங் கக் காட்டும் ஓர் அரிய நினைவுச்சின்னம் ஆங்கு எழுந் தது; சக்கரவாளம்’ எனப் பெயர்பூண்ட அவ்வமைப் பினைத் தன்பாற் கொண்டதால், இச் சுடுகாட்டுக் கோட் டம் சக்கரவாள கோட்டம் என அழைக்கப்பெறும் சிறப் பினுக்கு உரியதாயிற்று” எனக்கூறிற்று. -

மணிமேகலா தெய்வம் கூறுவனவற்றைக் கருத் தோடு கேட்டுவந்த சுதமதி இறுதியில் சிறிதே கண் ணயர்ந்து விட்டாள். அவள் கண்ணயர் நிலையை எதிர் நோக்கியிருந்த அத்தெய்வம், மணிமேகலயை நினைவிழக் செய்து, தன் ஆகத்தோடு அணைத்துக்கொண்டு,

வழியேசென்று, மணிபல்லவத்தை அடைந்தது.

மணிபல்லவத்திடை கொண்டு தெய்வம், மீண்டும் உவவனம் மறத்து 536ು கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/96&oldid=561471" இலிருந்து மீள்விக்கப்பட்டது