பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

உயிர்க்கு எதகுலும், எந்த தேசத்திலும், எந்தவிதக் கேடும் நேராவாறு நின்று காப்பை எனக் கேட்டுள்ளேன். அத்தகையோய், என் மகனைப் பேய் உண்ணப் பார்த். திருந்தது ஏகுே?’ எனக் கூவிப் புலம்பி அழுதாள். கோதமையின் அழுகையொலி கேட்டு ஆங்கு வந்த, சம்பாபதி, அவள் துயர்க்காரணம் யாது என அன்போடு, கேட்டது. கோதமை நிகழ்ந்ததைக்கூறி, சம்பாபதி: கண்ணற்ற என் கணவனுக்குக் கைக்கோலாமாறு என் உயிரைக் கைக்கொண்டு இவன் உயிரைத் தத்தருள்: என வேண்டிக் கொண்டாள். கோதமை விரும்புமாறு, மாண்டவர் மீண்டும் உயிர் கொண்டெழுதல் உலகியல் பன்று: அவ்வாறு உயிர் அளிக்கும் ஆற்றல் தனக்கு மட்டு மன்று, ஏனைய எக்கடவுளர்க்கும் இல்லே என்பதை அவளுக்கு உணர்த்த விரும்பிய அத்தெய்வம், நால் வகை அருவப் பிரமர்முதலாம் வரம்கொடுக்கும் வன்மை வாய்ந்த கடவுளர் அனைவரையும் அவள் முன்வரவழைத் தது. வந்த கடவுளர்களும், நரை மூதாட்டி ஒர். உடலை விட்டுப்பிரியும் உயிர், பிரித்த அப்போதே பிறிதோர் உடலில் சென்று புகுந்து விடும். ஆதலின், போன உயிரை மீட்டளித்தல், எவ்வகையாலும் இயலாது. என் செய்வோம்’ எனச் சம்பாபதி கூறியவாறே கூறினர். தேவர் உரைத்தது கேட்டு உள்ளம் தெளிந்த கோதமை, மகன் உடல் மயானத்தில் இட்டு அகன் ருள். .

சுதமதி உலகின் பல்வேறு பகுதிகளை உறை விட மாகக் கொண்டு விளங்கிய கடவுளர் எல்லோரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/95&oldid=561470" இலிருந்து மீள்விக்கப்பட்டது