பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

காலத்தே தோன்றிய அவ்வளவு பழமையும் பெருமை யும் உடையது. காளிகோட்டம் முதலாம் பற்பல கோட்டங்களையும், கள்ளி கான்றை முதலாம் பற்பல மரவகைகளையும், வாகை மன்றம், முதலாம் வகை வகையான மன்றங்கனையும் கொண்டு, பிணங்களைச் சுடவும், இடவும், கவிக்கவும், புதைக்கவும், இரவிலும், பகலிலும் வருவார் எழுப்பும் அழுகையொலி போலும் பற்பல ஒலிகளால் நிறைந்தது.

  • சுதபதி! இச்சுடுகாட்டைப் பண்டொருநாள் சாரிங் கலன் எனும் அத்தணச் சிறுவன் ஒருவன் கண்டான். ஆங்குள்ள காட்சிகளைக் கண்ணுற்ற அவன், அதை ஒரு பெரிய பேருர் என மயங்க உணர்ந்தான். அவ்வுணர் வால், அவன், ஒரு நாள் நள்ளிரவில், அதனுன் தனித்துப் புகுந்தான்; புகுந்தவன், ஆங்கே ஒரு பிணத் தின்னும் பேயைக்கண்டான். அவ்வளவே, அச்சம் அவனை ஆட்கொண்டுவிட்டது. அலறிப் புடைத்துக் கொண்டு ஒடித், தாயின்முன் வீழ்ந்தான். அக்கணமே அவன். உயிரும் அவன் உடலைவிட்டு அகன்றது. தனக் கும் தன் கணவனுக்கும், தளர்ந்த பருவத்தில் தாங்கி நிற் கும் பற்றுக்கோடாய் விளங்கிய ஒரே மகன் உயிரிழந் தயை கண்டு, முதுமையால் கண்ைெளி இழந்திருந்த கோதமை உள்ளம் தொந்தாள். மகன் உடல் ஏந்தி மயனத்திற்குச் சென்ருள். சம்பாபதியின் கோயில் முன் தின்து, சம்புத்தீவின் காவற்றெய்வமே புகார் நகரத் தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து, இந்நகர் வாழ்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/94&oldid=561469" இலிருந்து மீள்விக்கப்பட்டது