பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 |

அகன்றுளான். நீங்கள் பொழிலைவிட்டுப் புறத்தே சென்றதும் இவளைக் கைப்பற்றிக்கொள்வன். ஆதலின் தேரோடும் பெரிய தெருவழியே போகாதீர்கள், இப்பொழிலைச் சூழ்ந்து கிடக்கும் நாற்புற மதில் களில், மேற்றிசை மதிற்கண் ஒரு சிறிய நுழை வாயில் உளது. அதுவழியே சென்ருல், அரும்பெரும் தவம் ஆற்றும் பெரியோர்களும் விரும்பி வந்து வாழும் சக்கரவாளக் கோட்டம் தோன்றும். இவ்விருட்போதில் மட்டுமேயல்லாமல் பகற்பொழுதிலும் ஆங்கு உமக்குத் துயர் நேராது. இவ்விரவை ஆங்குக் கழித்து அகலுங்கள்’’ என்று கூறினுள். -

மணிமேகலா தெய்வம் கூறிய மாற்றங்களைக் கேட்ட சுதமதி, நன்று தாயே! தாங்கள் கூறியவாறே நாங்கள் ஆங்குச் செல்கிருேம் செல்வதன் முன் ஒன்று கேட்க விரும்புகிறேன். புகார்ப் பெரு நகரில் வாழ்வோர் அனைவரும் அக்கோட்டத்திற்குச் சுடுகாட்டுக் கோட்டம் என்றே. பெயர் குட்டி அழைக்கின்றனர். தாங்களும், என்னக் காதலித்துக் கைவிட்டு மறைந்த மாருதவேகனும் மட்டும் சக்கர வாளக் கோட்டம் என வழங்குகிறீர்கள். அது ஏனே? இவ்வையத்தை, அன்னையே! அகற்றி யருள்வாயாக" என வேண்டிக்

கொண்டாள். .

சுதமதியின் வினவிற்கு விடையளிக்க முன் வந்த மணிமேகலா தெய்வம், சுதமதி! இச்சோலையை. அடுத்துள்ள சுடுகாடு, புகார் நகர் தோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/93&oldid=561468" இலிருந்து மீள்விக்கப்பட்டது