பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மணிபல்லவத் தீவை வாழிட மாக்கிக்கொண்டு, அவ்வழி யாக வரும் வங்கங்கட் கு ஏதும் நேராவாறு காக்கும் நற்றுணத் தெய்வமாய மணிமேகலா தெய்வம், புகார் நகரத்துப் பெண்ளுெருத்தியின் வடிவில் அவர் முன் வந்தது. பளிங்கு மண்டபத்தின் இடையே இடம் பெற்றிருக்கும் புத்த பீடிகையை வலம் வந்து வணங். கிற்று. புத்தன் புகழை வாயாரப் பாடிப் பரவிற்று. அதைப் பார்த்தவாறே இருவரும் ஆங்கு அசைவற்று நின்றிருந்தனர். அந்நிலையில், கணவனே இழந்த, கடுந்துயரால் பொலிவிழந்த முகத்தோடு வந்து தாய். மனை புகும் பெண்ணே போல், ஞாயிறு மறைய: மயங்கிருள் சூழ அந்திப் பொழுது வந்து படர்ந்தது.

மாலையும் மறைந்தது. எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது. வானவீதியில் வத்து தோன்றிய வெண் திங்கள் ஒளியால் மலர்ப்பொழில் விளக்கம் பெற்றது. அந்நிலயில் வ்ழிபாட்டை முடித்துக் கொண்ட மணிமேகலா தெய்வம், சுதமதியை அணுகி, நனி. இளம் பருவத்தினராய் நீவிர் இருவீரும், ஈங்கு இந்: நேரத்தில் தனித்து நிற்பது ஏனே? உங்கள் உள்ளம் வருந்த, ! உமக்கு நேர்ந்த துயர் யாதோ?’ என்று. அன்போடு வினவற்று. சுதமதி நிகழ்ந்ததைக் கூறினுள். அதுகேட்ட அத்தெய்வ மகள், "மகளே மன்னன் மகனுக்கு மணி மேகலையால் கொண்ட வேட்கை தனித்திலது. மலர்ப் மொழில் மாதவத்தோர் வாழிட, ஆ மிந்து அஞ்சி, இவன்.இப்போது விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/92&oldid=561467" இலிருந்து மீள்விக்கப்பட்டது