பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

கடந்த வாமா என் அப்புத்தன் புகழைப்பாடுவதல்லாது பிற எதிலும் என் சிந்தை புகுவதில்லை” என விடை -யிறுத்தாள். . . - சுதமதியின் துயர்மிகு வரலாறு கேட்ட வேந்தன் மகன், சுதமதி! என் மனம் கவர்ந்த ഥങ്ങിശോധ. உன் துணையால் பெறமாட்டாது துயர் உற்றேன். இனி, இவளைச் சித்திராபதியின் துணை பெற்று அடைய இன்றே அவள்பாற் செல்கின்றேன்” எனச் சூளுரைத்துச் சோலையை விட்டகன்ருன். r

மன்னன் மகன் மலர்ப்பொழிலைவிட்டு அகன்றனன் என்பதை அறிந்து கொண்டதும் பளிங்கறையைத் திறந்துகொண்டு வெளியே வந்த மணிமேகலை, சுதமதி யைத் தாய்ப்போல் வந்து என் துயர் தீர்த்த ஆருயிர்த் தோழி, நீ எனப் பாராட்டினள். பின்னர் அவனை நோக்கிச், “சுதமதி கற்பு நெறி கெட்டவள், தவ தெறிக்குத் தகுதியற்றவள், உயர்குல உரிமை இழந்தவள், பொருள் விலையாட்டி என்றெல்லாம் விளித்து என்ன இழித்தும் பழித்தும் அகன் றன். அவ்வுரைகளைக் கேட்டும் என் நெஞ்சு அவன்பால் தேசம் கொள்கிறது. தோழி! இதற்கு யான் என்செய்வேன்; சுதமதி: காமத்தின் இயல்பு அன்னதோ? அன்னதாயின் அழிக அக்காமம்’ எனக் கூறிக் கலங்கிக் கண்ணிச் சிந்திள்ை. ' ' ' ' ". . .

சுதமதி, மாதவி மகளின் மனத்துயர் அறிந்து சிந்தை தெரிந்தாள். அப்போது ஆங்கோர் அதிசயம் நிகழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/91&oldid=561466" இலிருந்து மீள்விக்கப்பட்டது