பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

கைவரப் பெற்றுள்ளாள். மேலும் காமவுணர்ச்சியைக் கடந்து வென்றவள் அவள். ஆகவே, அவளே அடையத் துணிவது அறிவுடைமையாகாது’ என அவன் உள்ளம் ஏற்குமாறு மெல்ல எடுத்துரைத்தாள். அது கேட்ட அவன், சுதமதி ஆறு பெருகிளுல் அணை எதிர் நிற்காது. அதுபோல் காமவெறி தலைக்கேறியவர் பால், உள்ளத்தை ஒருவழி நிறுத்தும் நிறையெனும் தற்குணம் நில்லாது. அவளை, எவ்வாரேனும் என் அடையவளாக்கிக் கொள்வேன்” எனச் சூளுரைத்துச் சோலையின் நீங்கிச் செல்லலுற்றன்.

மலர்ப்பொழிலை விட்டு நீங்கும் மன்னன். மகன், சற்று நின்று சுதமதியை நோக்கி, ‘சுதமதி ஒன்று கேட்க மறந்து விட்டேன். விஞ்சையன் கைவிட சமணப் பள்ளியில் வாழ்பவள் நீ என ஊரார் உரைக்கக் கேட்டுள்ளேன் . ஆங்கு வாழ்ந்திருந்த நீ, இப்போது, புத்தப்பள்ளி புகுந்து வாழ்வதும், ஆங்குறையும் இவளோடு தொடர்பு கொண்டு இம் மலர்ப்பொழில் புகுந்ததும் ஏனே?’ என்று வினவினன். வினவிய அரசனுக்குத் தான் அருகன் கோயில் அடைந்து வாழத் தொடங்கியது முதல் மணிமேகலையோடு மலர் கொய்ய வந்தது ஈருக நிகழ்ந்த தன் வாழ்க்கை வரலாற்றின விளங்க உரைத்து, ‘அரசே! அன்று தொட்டு, உலக நோன்பில் பல கதி உணர்ந்து தனக்கெனப் வாழாப் பிறர்க்குரியாள! இன்பச் செல்வம் கன்பதை எய்த் அருளறம் ஆண்ட் அண்குல் காடனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/90&oldid=561465" இலிருந்து மீள்விக்கப்பட்டது