பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

களைக் கொண்டிருக்கும் கொள்கலமாகவும் அமைந்தது

இவ்வுடல். புற்றினுள் இருக்கும் பாம்பைப் போலச்

சினத்தை உள்ளே கொண்டிருப்பதும், துன்பம், கவலை,

வருத்தம், வாட்டம் முதலியவற்றை இடையருது

அடைவதுமாகிய உள்ளத்தைத் தன்பாற் கொண்ட

தும் இம்மானிடவுடல் ஆகும். அறிவின் மிக்கோய் !

உடலினது தகைமை இதுவென்பதை உணர்ந்து, இதன்

மேற்கொண்ட ஆசையை விட்டொழிப்பதைக் கருது' வாயாக."

சுதமதி உரைத்த உரை, உதயகுமாரன் செவி வழிப் புகுந்து அவன் சிந்தையுள் செயற்படுவதற்குள், பளிங்கு மண்டபத்தினுள் கிடந்த ഥങ്ങിഥേയ്ക്കു உருவம் அவன் கண்களிற் பட்டுவிட்டது. பளிங்குப் பார்வைபோல் காட்சி அளித்த மணிமேகலையின் வடிவைக் கண்டதும், சுதமதி உரைத்த, உயர்ந்த உண்மைகளை உதயகுமாரன்' மறந்தான். அவளே அடையும் ஆர்வம் உந்த, அவள் அடையுண்டிருக்கும் பளிங்கு மண்டப வாயிலைத் தேடி அதைச் சுற்றி சுற்றி வந்தான். எவ்வளவு முயன்றும் அதன் வாயிலக் காண மாட்டாது கலங்கி நின்ற அரசகுமரனைச் சுதமதி அணுகி, அரசிளங்குமர! முருகனை நிகர்க்கும் தின் முகப்பொலிவு கண்டும் மணிமேகலையின்மனம் நெகிழாது. முன்ன வினைப் பயத்தால் அவள் தவநெறி மேற்கொண்டுள்ளாள். தன் தவநெறிக்குக் கேடு சூழ்வாரைக் கெடுத்தொழிக்கும் ஆற்றல் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/89&oldid=561464" இலிருந்து மீள்விக்கப்பட்டது