பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

உதயகுமாரனே, அந்நிலையில் ஆங்குக் கண்ட சுதமதி, தனியறையில் அகப்பட்டுத் தவிப்பவள் பே ல் நடுங்கிளுள். பின்னர் ஒருவாறு உளம் தேறி, அரசிளங் குமரனை அணுகிளுள். "இளவரசே! நீயோ அறவழி அரசாண்ட பெரியோர் வழிவந்தவன். உன் முன்னேன் ஒருவன், தன்கண் வழக்குரைத்து முறை வேண்டி வந்த இருவர், தன் நனி இளமைப் பருவம் கண்டு, நம் வழக் குணரும் வன்மை இவ்விளையோனுக்கு இராது என எண்ணி, உரைக்க வந்த வழக்கை உரையாதே அகல் வது கண்டு, முதியோன் வேடம் பூண்டு வந்து, அவர் வழக்கினை, அனைவரும் வியக்கும் வண்ணம் ஆராய்ந்து முறை செய்தான் எனக் கூறக் கேட்டுளேன். அத்துணை மூதறிவுடையோர் குடியில் வந்த உனக்கு அறிவும் அருங்குணமும், அரசியல் முறையும் என் போலும் இள மகளிர் எடுத்துக் கூறுவது இயலுமோ? கூறுவதுதான் பொருந்துமோ? பொருந்தாது என்பதை நானும் அறி வேன் என்ருலும், ஒன்று கூற விரும்புகிறேன்' எனத் தொடங்கி,

'இவ்வுடல் முன்வினை காரணமாக வந்து வாய்த்த தாகும்; வரும் பிறவியின் வினையை விளைவிப்பதற்குக் காரணமாவதும் இவ்வுடல் ஆகும். புனைந்துள்ள ஒப் பனைகளை நீக்கினுற் புலால் நாற்றத்தை வெளிப்படுத்து ங்கம் இவ்வுடல் ஆகும்; மூப்பையும் அழிவையும் உடை யதும் இதுவாகும். கொடிய பிணிகளுக்கு இரும்பிடமாக சைக்ள் பற்றியிருக்கும் இடமாகவும், குற்றங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/88&oldid=561463" இலிருந்து மீள்விக்கப்பட்டது