பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

நீலமலர் எனக்கருதி வந்து மொய்க்கும் வண்டுகளை ஒட்டும் மணிமேகலையின் செங்கைபோல், தாமரை மலரு மாறு அதன் மீது பாய்ந்து, அதில் கிடந்து பிறழும் கயல் மீன்களைக் கவர்ந்துண்ணும் கருத்தோடு அம் மலர்மீது பாய்ந்து வந்தே மீளும் சிரல் பறவையையும் மணி மேகலைக்குக் காட்டி மகிழ்வூட்டினன்.

அந்நிலையில், தெருவில் தேரொலி எழக்கேட்ட கணிமேகலை; ' சுதமதி! இவ்வூராளும் அரசன் மகன் உதயகுமாரன் என்மீது காதல் கொண்டுளான் என முன்னம் ஒருமுறை வயந்தமாலை கூறக் கேட்டுளேன். இப்போது கேட்கும் தேரொலி, அவன் ஊர்ந்துவரும் தேரொலியோ என்று எண்ணி, அஞ்சுகிறது என் நெஞ்சு எனக் கூறி நடுங்கிள்ை. மணிமேகலையின் மன தடுக்கத்தைக் கண்ட சுதமதி, அவளை ஆங்குள்ள பளிங்கு மண்டபத்தினுள் அடைத்து, அதன் புறத்தே விருந்தான்.

சிறிது பொழுது கழிந்தது. மணிமேகலை கூறிய வாறே உதயகுமாரன் அங்கு வந்தவன் சுதமதியை அணுகி, “அந்தணன் மகளே! உன் உடன் வந்த கணிமேகலை, மணப் பருவம் பெற்ற மங்கை ஆயி னள் கொல்? அவன் உடலுறுப்புக்கள் அப்பருவ வ ள | ச்சி க் கே ற் ற வனப்புடையவாயின.கொல்? தாயோடு தவநெறி மேற்கொண்டு பெளத்தப் பள்ளி புகுந்து வாழ்ந்திருந்தவன், இன்று மலர் கொய்யத் தனியே வந்த காரணம் யாதோ’ எனக் காமக் கருத்துப் புலப்படப் பலப்பல கேட்டு நின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/87&oldid=561462" இலிருந்து மீள்விக்கப்பட்டது