பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

அப்பீடிகையை விட்டு நீங்கா. சிந்தையும் செயலும் உறவுடைய; சிந்தை வழியதே செயல்; சிந்தையில்லே யேல் செய்வினை இல்லே என்ற உண்மையை உலகோர்க் குக் காட்டவே அமைக்கப்பெற்றது அப்பீடிகை. மாதவி : நின் மகள், மாண்பு மிகு அம்மலர்ச் சோலைக்கே சென்று. மலர் பறித்து வருக. அவளுக்குத் துணையாய் யானும் செல்கிறேன்" எனக் கூறி அவன் இசைவினைப் பெற்று, மணிமேகலையோடும் மலர்ச் சோலை நோக்கிப் புறப் பட்டாள்.

மணிமேகலையும் சுதமதியும் பெளத்தப் பள்ளியின் நீங்கி, புகார் நகரத்துப் பெரு வீதிகளைக் கடத்து உவ வனத்துள் நுழைந்தனர். மணிமேகலையை, அம்மலர்ச் சோலையைச் சுற்றி அழைத்துச் சென்ற சுதமதி, தும்பி குழல்ஊத, வண்டு யாழ் இசைக்க, மயிலாட மத்திகண்டு மகிழும் காட்சியையும்; பளிங்குபோல் தெளிந்த நீரால் நிறைந்த குளத்தில், பச்சைப் பசேலெனப் படர்ந்த இலைகளுக்கிடையே தனியே மலர்ந்திருக்கும் தாமரை மலரில் அரச அன்னம் அமைந்திருக்க, அது கண்டு மகிழுமாறு, கரையில் நின்று ஆடும் மயிலின் ஆட் டத்திற்கு ஒப்ப, கம்பங்கோழி முழவிசைக்க, குயில் பாடும் காட்சியையும், தெருப்புழுதி படித்த மணி மேகலையின் மதிமுகம் மங்கித் தோன்றுவதுபோல், விரிந்த வெண்தாழை மலரினின்றும் உதிர்ந்த தாதுகள் டிந்த செந்தாமரை மலரையும், தாமரை மலர் நிகர்க்கும் முகத்திற்கிடத்து ஒளிகட்டும் கருவிழிகளைக் கரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/86&oldid=561461" இலிருந்து மீள்விக்கப்பட்டது