பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

வேண்டுமளவு நீரை நிறைக்கவும் போக்கவும் வல்ல பொறி அமைக்கப்பெற்ற நீர் நிலையை நடுவே பெற்று, நாற்புறமும், மலர்ச் செடிகள் மண்டிக்கிடக்கும் இலவந் திகை என் ருெரு சோலேயுளது. ஆங்கு, அரசனும், அவன் உரிமைச் சுற்றமுமல்லது பிறர் எவரும் புகுதல் கூடாது. உய்யானம் என்ற பெயருடையதொரு பூம் பொழில் உளது. ஆங்கு மலர்த்த மலர்கள் வாடுவதில, அம்மலர்த்தேனை உண்ண வண்டுகள் விரும்புவதில்லை. வானுளோர் அல்லது மண்ணுளோர் அம்மலர்களை விரும் பார். மேலும் பூதக்காவல் பொருந்தியது அப்பொழில்; அத ஞல் அறிவுடையோர் அதை அணு கார். சம்பாதி வனம், கவேரவனம் இண்டும் நனி மிகப் பழமை உடையன, தெய்வக்காப்புடையன வாதலின் அவற்றை அணுகத் தெரிந்தோர் அஞ்சுவர். ஆகவே, மாதவி உவவனம் ஒன்றே மலர் பறித்து மகிழும் மாண்புடையது. அதனிடையே பளிங்கு மண்டபம் ஒன்று உளது. அதன் உள்ளிடு பொருள் புறந்தோன்றுமே யல்லது, உள்ளெழு ஒளி புறம் வந்து ஒலிக்காது. அம்மண்ட பத்தின் நடுவே புத்தன் திருவடித் தாமரை பொறித்த பீடிகை உளது. அதில் இட்ட அரும்புகள் இட்ட அப்போதே மலர்ந்து மணக்கும். மலர்ந்த மலர்கள் பல்லாண்டு கழியினும் வாடி மணம் இழப்பதில்லை. அப்பீடிகை முன் நின்று, கருத்தில் யாதேனும் ஒரு கடவுளை நினைத்து மலர் தூவில்ை, தூவிய மலர்சள், அப்பீடிகையின் நீங்கி அக்கடவுளரைச் சென்று சேரும். எவ்வித நிகணப்பும் இலாய் நின்று தூவிய மலர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/85&oldid=561460" இலிருந்து மீள்விக்கப்பட்டது