பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

சுதமதி, மாதவி கூறியதைக் கேட்டாள். மணிமேக இலயோ வனப்பில் மிகுந்தவள். மேலும் நனி இளமைப் பருவத்தள், காலமோ, நகரில் விழா நிகழும் காலம் வீதி களில் வம்பரும் துர்த்தரும் வந்து திரிவர். இந்நிலையில் மணிமேகலை, மலர் கொய்யத் தனித்துச் செல்வது மதி யுடைத்தன்று என எண்ணினுள். தனக்கு தேர்ந்த கதி, தன் தோழியின் மகளுக்கு நேர்ந்து விடுதல் கூடாது எனக் கருதினுள். அதல்ை, மகளை மலர் பறித்து வருமாறு பணித்த மாதவியை நோக்கி, தோழி: மணிமேகலை யின் இம்மேனி நலத்தைக் கண்டால் காமன் மலர்க் கன தொடுப்பதை மறந்து நிற்பன், ஆடவர் கண்டால், இவனே விட்டும் அகல்வரோ? அவர்கள் தம் இயல்பு கெட்டு இவர்பின் திரியாது நிற்பதும் உண்டோ? பேடியர் அல்லவோ அவ்வாறு நிற்பவர்? ஆகவே, தோழி! மலர் கொய்ய, மகளைத் தனியே போக விடுதல் தகுதியுடைத்தன்று. மாதவி! நான் இம்மாநகர்க்கு வர தேர்ந்தது மலர்மீது கொண்ட காதலால், துணையின்றிச் சென்றதாலன் ருே; என்தாய் உயிரிழந்து போனதும், நான் காமுகன் வலைப்பட்டுக் கற்பிழந்து போனதும், தந்தை தேடி வந்து தளர்ந்ததும் அதல்ை விகாந்தன அல்ல்வோ?’ எனக் கூறி மலர் பறிக்க மணிமேகலை தனியே செல்லா வண்ணம் செய்தாள்.

பின்னர், “மாதவி புகார் நகரம் பூம்பொழில் வளத்' தால் பொலிவுற்றது என்ருலும், அவை அனைத்தும் மலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/84&oldid=561459" இலிருந்து மீள்விக்கப்பட்டது