பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

அல்லள். கற்புக்கடம்பூண்ட கண்ணகியின் மகளாவன். அத்தகையாள் தவவொழுக்கம் மேற்கொள்வதல்லது அவவொழுக்கம் மேற்கொண்டு ஆடிப்பாட ஆங்கு வாராள். காதலன் இறந்த கடுந்துயர் பொருது கலங்கிய எனக்குப், பிறவி உற்ருேர் பெருந்துன்புறுவர். பிறவி அற்ளுேர் பேரின்பம் பெறுவர். பற்ருல் வருவது பிறவி, அது அற்ருல் வருவது விடு பேறு என்ற உண்மைகளையும், கள், காமம், கொலை, களவு, பொய் எனும் இவற்றை அகற்றுவதால் உண்டாம் அமைதி வின் ஆற்றலையும் உணர்த்தி உய்யும்நெறி கட்டிய உரவேர் வழி நின்று, துறவறம் மேற்கொண்டு ஆடல் பாடல்களில் ஆசை இழந்தேன். ஆகவே யானும் வாரேன்’ என மறுத்துக் கூறி அனுப்பிவிட்டாள். -

தாய் மாதவிக்கும் வயந்தமாலைக்குமிடையே திகழ்த்த உரையாடல், கொலையுண்ட தந்தை கோவலயுைம், மறைந்து மாண்புற்ற தாய் கண்ணகியையும் திண்ம் பூட்டவே, மாதவி அருகில் அமர்ந்து மலர் தொடுத் திருந்த மணிமேகலை கண்கள் நீர் சொரியக் கலங்கி அழுதாள். அவள் கண்களினின்றும் ஒழுகிய நீர், தென் டுக்கும் மலர்கள் மீது வீழ்ந்து மா சுபடுத்திவிட்டது. அதுகண்ட மாதவி மகளின் கண்ணிரைத் துடைத்து விட்டு, "மகளே! நின் கண்ணிரால் இம்மலர்கள் மாசுண் t-6Bs. பூசைக்கு இவை பொருந்தா சென்று புது மலர் கொணர்க எனப் பணித்தாள். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/83&oldid=561458" இலிருந்து மீள்விக்கப்பட்டது