பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

புகழ் பரவும் பணிமேற்கொண்டு ஆண்டு வாழ்ந் திருந்தாள்.

அவ்வாறு வாழ்ந்திருக்கும்போது, காதலன் கொலை யுண்டான். காதலன் மனைவி வானேர் உலகம் புகுந்தாள் என்ற செய்தி கேட்டு வருந்தி, வாழ்க் கையை வெறுத்துத் துறவறம் மேற்கொண்டு, தன்னைப். போலவே, அப்புத்தப் பள்ளி அடைந்து வாழும் மாதவியைச் சுதமதி கண்டாள். அவள் மாண்புமிகு குணங்களை அறிந்து அவளோடு நட்புக் கொண்டான். அன்று முதல் அவளைவிட்டுப் பிரியாது அவளோடு. வாழ்ந்து வந்தாள்.

திங்கள் சில சென்றன. புகார் நகரில் இந்திர விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. வள்ளுவன் விழா நிகழ்ச்சியை, மூதூர் வீதிகளில் முரசறைந்து அறிவித்தான். அப்போது ஒருநாட் கால மாதவியின் உயிர்த் தோழியாகிய, வயந்தமாலை பெளத்த பள்ளியுட் புகுந்து மாதவியைக் கண்டாள். மாதவியின் வாடிய மேனி கண்டு வருந்தினள். பின்னர் மாதவியும், மணி மேகலையும் மன்றம் ஏறி ஆடவாராமைகுறித்து மக்கள் வழங்கும் ഖങ്ങ8ഫെrു கேட்டு மாதவியை -ஈன்று. சித்திராபதி சிந்தை நோவதை மாதவிக்கு எடுத் துரைத்தாள்.

அதுகேட்ட மாதவி, "தோழி! இதோ இருக்கும். இவள் யான் பெற்ற மகளேயாயினும், என் மகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/82&oldid=561457" இலிருந்து மீள்விக்கப்பட்டது