பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

தந்தையைத் தாங்கி அழைத்துக்கொண்டு தெருவில் வந்தாள். புகார் நகரத்துப் புறநகர் வீதிகளில் புகுந்து, "அல்லல் உறுகிருேம்; ஆரும் துணை இலேம்; எம்பால் அன்பு காட்டும் அறவோர் எவரும் இலரோ? என அழுது புலம்பினுள். அப்போது அவர் எதிர்வந்த சங்க தருமன் எனும் புத்த துறவி, அழுது புலம்பும் சுதமதியை யும், அவளைப் பற்றுக்கோடாக் கொண்டு தளர் நடை வயிட்டு வரும் கெளசிகனையும் கண்ணுற்ருன். தூய பசும் பொன்னின் நீறம்காட்டும் காவி ஆடை உடுத்திருந்த அவன் முகம், கடும் வெயில் காயும் அந்நண்பகற்போதி லும் அருளும் அழகும் காட்டி அமைதியுற்றுத் தோன் நிற்று: வீதியின் இருமருங்கிலும் வானளாவ உயர்ந்து விளங்கிய வீடுகள் தோறும் சென்று பிச்சையேற்றுவந்த அம்முனிவன், அவர்களை அணுகி, "உற்றதுயர் யாது" என அன் போடு உசாவின்ை. அன்பும் அருளும் சொட்டும் அவன் சொல் கேட்ட அளவிலேயே, சுதமதி, தங்கள் துயர் ஒழிந்து போனதாக "உணர்ந்தாள். அவள் அகம் குளிர்ந்தது. தங்கள் வரலாற்றையும் தங்கட்கு நேர்ந்த இன்னலயும் விளங்க எடுத்துரைத் தாள். அவர் துயர்நிலைகேட்ட அத்துள்யோன், தன்கைப் பிச்சைப்பாத்திரத்தை அவள் கையில் கொடுத்து விட்டு, மறையோனைத் தோளில் சுமந்து, பெளத்தப் பள்ளியுட் கொண்டு சென்ருன். ஆங்கு மறையோன் புண் மறைய மருந்திட்டான். சுதமதியின் மனமாசு மறையப் புத்தன் பெருமைகளை உணர்த்தின்ை. அறவோன் உணர்த்த, புத்தன் பெருமைகளை உணர்ந்த சுதமதி, அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/81&oldid=561456" இலிருந்து மீள்விக்கப்பட்டது