பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

கைவிட்டான். மகள் வாழும் புகார் தகர் வாழ்வில் அவன் மனம் சென்றது. அன்று முதல், புகார் நகரத்துப்

பெருவீதிகளில் பிச்சையேற்று உண்டு, மகளுக்குத் துணை

யாய், மகளோடு வாழ்ந்திருந்தான்.

ஒருநாள், கெளசிகன், கையில் பிச்சைப் பாத்திரம் ஏந் தித் தெருவழியே சென்றுகொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக ஓடிவந்த கன்றீன்ற பசு ஒன்று, அவன் மீது பாய்ந்து கோடுகளால் அவன் வயிற்றைக் கிழித்துக் குடரைச் சரித்து ஓடிற்று. குடர் சரிந்து கீழே வீழ்ந்த அந்தணன் மெல்ல எழுத்தான். செவ்வலரி மாலையை ஏந்திச் செல்வதுபோல், குருதிசொட்டும் குடரைக் கையில் தாங்கியவாறே நடந்துசென்று, மகள் வாழிடம் என்ற உரிமையாலும், மேலும் நடந்து செல்லமாட்டாது தளர்ந்து விட்டமையாலும் அண்மையில் இருந்த அருகன் கோயிலுட் புகுந்து, ஆங்குறையும் சமண முனிவர் பால் சரண் புகுந்தான். அந்தணனின் அந்நிலை கண்டும், அம் முனிவர்க்கு இரக்கவுள்ளம் உண்டாக வில்லை போலும், 'ஏடா! நீ ஈண்டு இருத்தற்குரியனில்லை. இவ்விடம் விட்டு இன்றே நீங்கு’ எனக் கடிந்து, சுதமதியோடு அவனை வெளியேற்றி வாயில் அடைத்துக்கொண்டனர்.

துரயோர்போல் தவவேடம் கொண்டிருந்தும், துன் புற்று வந்தவரின் துயர்போக்க நிகனயாது, துரத்தித் துன் புறுத்திய சமணர் செயல் கண்டு, சுதமதி செய்வதறியாது திகைத்தாள். கண்ணிர் சொரிந்து கலங்கினுள். தளர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/80&oldid=561455" இலிருந்து மீள்விக்கப்பட்டது