பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

அவளை அறவே மறந்து கைவிடுவதோ கூடாது. மாருக, அவளைத் தேடிப் பெற்றுத் துணை புரிதல் வேண்டும் எனத் . துணிந்தான். மேலும், மனைவி இறந்து விட்டாள். இல்லாளோடு எல்லாம் போம். ஆகவே அவளை இழந்த பின்னர் ஆண்டுத் தனித்திருந்து வாழும் வாழ்க்கையில் இன்பம் இராது என உணர்ந்தான். அதனல், பிறந்து வளர்ந்து பெரு வாழ்வு வாழ்ந்த ஊரை மறந்து வெளி யேறி, மகளைத் தேடிப் புறப்பட்டான்.

சண்பை நகரத்து அந்தணர் சிலர், அப்போது குமரி' நீர் ஆடும் கருத்துட்ையராய்த் தமிழ் நாடு நோக்கிப் புறப்பட்டனர். அவரோடு, அவனும் தமிழ் நாட்டிற்கு வந்தான். தமிழ் நாடு புகுந்த அந்தணர், குமரித்துறையில் நீராடுவதன் முன், காவிரி கடலோடு கலக்குமிடத்தில் நீராடல் நிறை பயன் தரும் என்ற உணர்வினராய்ப் புகார் நகர் போந்து நீராடினர். அந்தணரோடு புகார் நகர் புகுந்த கெளசிகன், ஆங்குச் சுமதியைக் கண்டு கொண்டான். மகள் மீது கொண்ட காதல் மிகுதியால், அவள் ஒழுக்கங்கெட்டவள் என்பதை உணர்ந்திலன். மகளை மார்புற அனைத்துக் கொண்டு மனச்சுமை திர அழுதான். 'மகளே! ஈங்கு எவ்வாறு வந்தனை? உன் ഖrgജഖക கெடுத்துக் கைப்பற்றிக் கொணர்ந்த அவ் வித்தியாதரன் எங்கே துணையோடு வந்த நீ தனித்துக் கிடந்துதுயர் உறுவது ஏன்?" எனப் பலப்பல கேட்டுப் புலம்பினன். நிகழ்ந்தவற்றை மகள் கூறக் கேட்டு நெஞ். சுருகினன். அந்தணரோடு குமரியாடப் போவதைக்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/79&oldid=561454" இலிருந்து மீள்விக்கப்பட்டது