பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

விட்ட மாருதவேகனைச், சுதமதி அம்மாநகரெங்கும் தேடி குள். கடற்கரையிலும், கடை வீதிகளிலும், மன்றங்களி லும் மலர்ச் சோலைகளிலும் தேடித் தேடி அலேந்தாள். எங்கும் அவனேக் கண்டிலள். கண்கள் நீர் சொரிய, நெஞ்சு கலங்கி நீள் துயருற்ருள். அன்பன இழந்து, அழுது அகலந்து திரியும் சுதமதியைக்கண்ட் புகார் நகரத்து மக்கள், விஞ்சையனே நம்பி வந்து வாழ்விழந்து போன வள் எனப் பழி துாற்றினர். அது கண்டு நாணிய அவள், பலருங் காணப் புலம்பித் திரிவதை விடுத்துப் புகார் நகரத்து அருகன் கோயிலே அடைந்து ஆங்கு வாழ்ந் திருந்தாள்.

மலர் கொய்யச் சென்ற மகள், மருதவேகனை மணந்துகொண்டாள் என்ற செய்தியைச் சுதமதி யின் பெற்ருேர் அறிந்தனர். அவள் தாய், ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பும் உயர்வுள்ளம் உடையவள். அதனல் மகளின் ஒழுக்கக் கேட்டினைக் கண்டு உயிர் கொண்டு வாழ்தல் அவளால் இயலாதாயிற்று. மகளின் மறைவுச் செய்தி கேட்ட அப்போதே அவள் உயிரும் மறைந்து விட்டது. மகளையும், மனைவியையும் இழந்து துன்புற்ருன் அந்தணன். ஒழுக்க நெறியோடு உலகியலையும் உணர்த் தவன் அந்தணன். அதனல், மகளின் செயல் கண்டு மருண்டிலன்; மகள்மீது குறை காணவும் அவன் உள்ளம் மறுத்துவிட்டது. மகள் கொண்டது பிழை மணமே என்ருலும், அது அவள் பிழையன்று. அது அவன் விதியின் பிழை. ஆகவே மகக்ளச் சினப்பதோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/78&oldid=561453" இலிருந்து மீள்விக்கப்பட்டது