பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

கின்ை. மலர் மாலையும் மார்பிற் கிடந்து புரள, பொன்ன ணிகள் பல மேனியிற் கிடந்து மின்ன, பாருளோர் பார்த் , தறியாப் பேரழகு வடிவுடன் வந்து நின்ற வித்தியாதரன் வனப்பில் சுதமதியும் கருத்திழந்தாள். மாருதவேகன் தன்னல் வணங்கி வழிபடற்கேற்ற தெய்வப் பிறவியுடை

யான் எனக் கருதினுள். சுதமதியின் இளமை நலம். கண்டு கருத்திழந்து நிற்கும் அவன், தன் மீது அவளுக் கும் வேட்கையுளது என்பதைக் கண்டு கொண்டதும், துணிந்து அவளைக் கைப்பற்றிக் கொண்டான், நினைத் ததை முடிக்கும் நெஞ்சுரமும், செய்யும் செயலின் நலன் தீதுகளை நினைத்துப்பாரா அறியாமையும் உடைய சுதமதி: மாருதவேகன் செயலிற்குத் தடை செய்திலள். அவன்

விருப்பத்திற்கு அவளும் இசைந்து விட்டாள். அந்தணர் குலத்தவளான தான், வித்தியாதர இளைஞனே மணப்பது, முறையன்று என்பதை அவள் மனத்துட் கொண்டிலள். தன்னிலை கெட்டு அவன் வயப்பட்டு இன்பம் நுகர்ந். தாள். -

இருவரும், அவன் ஊர்ந்து வந்த வான ஊர்தி: ஏறிக் காவிரிப்பூம்பட்டினம் வந்து சேர்ந்தனர். இந்திர விழா நிகழ்ந்த இருபத்தெட்டு நாள் வரையும் புகார் நகரத். தின் பல்வேறு வளங்களையும் நலங்களையும் சுதமதிக்குக் காட்டி, இன்பம் ஊட்டி இன்புற்றன். அவள் தரும். இன்பத்தில் வேட்கை குறைந்தது. அவ்வளவே. ஒரு. நாள் அவளை விடுத்து அகன்று விட்டான். நிழல்போல். தொடர்ந்து, பிரிவின்றிப் பார்த்திருக்கும் போதே மறைத்து:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/77&oldid=561452" இலிருந்து மீள்விக்கப்பட்டது