பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

சுதமதி வளர்ந்து பெரியவளானள். பிறந்த குடிப் பெருமையாலும், பெற்ருேர் அளித்த உரிமையாலும்: பிறந்த நாள் தொட்டே எவர்க்கும் அடங்காது, தன் விருப்பம்போல் ஆடிப்பாடி வரும் வழக்கம் உடையளா ள்ை. வளர்ந்து வரைவுப் பருவம் பெற்ற பின்னரும் அடங்கி வாழும் வாழ்க்கை நெறியறியாது அவ்வாறே வாழ்த்து வந்தாள். அச்சம் என்பதை அவள் அறியாள். எங்கும் அஞ்சாது செல்வாள். எதைக் கண்டும் அவள் அஞ்சாள். இருளோ, இரவோ, அவளே அச்சுறுத்த மாட்டா. தனியே செல்வது தகாது; எங்குச் செல்லினும், எதைச் செயினும் துணை வேண்டும் என்ற நினைப்பு அவளுக்கு உண்டாவதில்லை. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்ச வேண்டுவன கண்டவிடத்தும் அஞ். சாது செல்வதால் இடையூறு பல உண்டாம் என்ற உணர்வு அவள் உள் ளத்தில் உருக்கொள்ளவில்லை.

இவ்வாறு வளர்ந்து வந்த சுதமதி, ஒருநாள் ஊரை அடுத்திருந்த மலர் வனத்துட் புகுந்து மலச் கொய்து கொண்டிருந்தாள். அப்போது புகார் நகரில் ஆண்டு தோறும் நிகழும் இந்திர விழாவைக் காணும். ஆர்வம் உந்த, விஞ்சைமா நகரினின்றும் புறப்பட்டுப் புகார் நகர் நோக்கி வானவூர்தியில் செல்லும் மாருத வேகன் என்ற வித்தியாதரன், அம்மலர்ச் சோலையையும், ஆங்கு மலர் கொய்து கொண்டிருக்கும் சுதமதியையும், கண்டான். அவள் அழகும் இளமையும் அவன் கருத். தைக் கவர்ந்தன. மண்ணில் இழிந்து மங்கையை அனு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/76&oldid=561451" இலிருந்து மீள்விக்கப்பட்டது