பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சுதமதி

அங்க நாட்டில், கங்கைக் கரையில் சண்பை எனும் அழகிய நகர் ஒன்று இருந்தது. சம்பை எனவும் அது அழைக்கப்பெறும். கங்கை வழியே வந்து புகும் கலங் களின் துணையால் அந்நகர் கடல்படு செல்வத்தால் சிறந் திருந்தது. மேலும், மழைதரு மேகத்தைப் பணிகொள் ஞம் திறத்தைப் பிறவிக் குணமாகக்கொண்டு காராளர் எனும் காரணப் பெயர் பெற்ற உழவர்களின் வாழிடமாய் விளங்கிய அப்பேருர் வயல் வளத்திலும் சிறந்து விளங் கிற்று. வாணிக வளமும், வயல்வளமும், ஒருங்கே வாய்க்கப் பெற்ற அந்நகரில் கெளசிகன் எனும் பெயர் பூண்ட அந்தணன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன், உள்ளம் உணர்வுவயப்பட்டு அலேயாவண்ணம் அடங்கு தற் பொருட்டு விரதங்களால் உண்டி சுருங்கல் முதலிய ஒழுக்க நெறிகளே முறையாக மேற்கொண்டிருந்தான். காருக பத்தியம், ஆகவனியம், தென்திசை அங்கி என்ற

முத்தீப் பேணும் பெருமையும் அவன்ப்ால் பொருந்தியிருந்: தது. ஆண்டு. முதிர்ந்த அவ்வந்தணன் அரிய பல அறங்கள் ஆற்றியதன் பயனுய்ப் பெண் மகவு ஒன்று பிறந்தது. முதுமைப் பருவத்தில் பிறந்தவளாதலாலும், தம் வயிற்றில் வந்து தோன்றிய ஒரே மகவு ஆதலாலும், அந்தணனும் அவன் மனைவியும், பெற்ற மகவுக்குச் சுதமதி எனப் பெயர் சூட்டி, அவள் விருப்பம் போன் பேணி வளர்த்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/75&oldid=561450" இலிருந்து மீள்விக்கப்பட்டது