பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

தான். உதயகுமரன் உயிரிழந்து வீழ்ந்தான். காஞ்சனன் உடனே உள்ளே விரைந்து சென்று, "வானூடெழுந்து விஞ்சையர் உலகம் புகுவோம்; வருக விரைந்து’’ எனக் கூறியவாறே, மனைவியின் வடிவில் நின்ற மணிமேகலை வின் கையைப் பற்றி ஈர்த்தான்.

அம்பலத்துத் தூண் ஒன்றில் இடம் பெற்றிருந்த பாவை, திடுமென வாய்திறந்து, “காஞ்சன! அணுகல் அவளை, அணுகல் அவளை, உன் மனைவி அல்லள் அவள்; அவள் மாதவி யீன்ற மடக்கொடி மணிமேகலையாவாள். காயசண்டிகை பசிநோய் நீங்கப்பெற்றதும், உன்னை நினைந்து,உன்நாடுநோக்கி வருங்கால், விந்தமலேமீது அறி யாமற் சென்றமையாற், குற்றம்பட்டு விந்தாகடிகையின் வயிறு புகுந்து அடங்கிவிட்டாள். அவள் முன்னே வினை செய்த பயன் இது. அரசன் மகனைக்கொன்றமைக்கு உன் அறியாமையே காரணமாம். என்ருலும் அக்கொடுவினைப் பயன் உன்னையும் விடாது வந்து வருத்தும்; வினைப் பயன நீ நுகர்ந்தே ஆதல் வேண்டும். வருந்தாது விஞ்சையர் உலகிற்கு ஏகுவாயாக’ எனக் கூறிற்று.

கந்திற்பாவை கூறிய உரையால் காயசண்டி கைக்கு வந்துற்ற கேட்டினை அறிந்து, காஞ்சனன் கலங்கி அழுதான். செருக்கால் சீரழிந்தாள் அவள்; ஆத்திரம்மிக்கு அறிவிழந்தமையால் அழிவுற்றேன். நான்; அந்தோ! என்செய்வேன்' என அழுது ஊர் அடைந்

காயசண்டிகை, காவலன் மகன் கொலையுண்டமைக் குக் காரணமாயிருளாயினும், அவள் மணி மேகலையின் மாட்சிமிகு கற்பிக்கு மாசு நேராவண்ணம் காக்கும் நற்று. ணையும் ஆயிஞள். வாழ்க அவ்விஞ்சையாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/74&oldid=561449" இலிருந்து மீள்விக்கப்பட்டது