பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71.

மகனை அணுகி அறிவுரை கூறி அனுப்புவதைக் கண்ட தும் கடுஞ்சினம் கொண்டான்; கண்கள் சிவப்பேறின. இவள் இவன்பால் காதல் கொண்டுள்ளாள். அதன. லேயே கனவளுகிய என்னை மதித்திலள். சாபவிடை பெற்ற பின்னரும் ஊர் திரும்பாது ஈண்டேயிருப்பதும் அதேைலயே. இவளை யும், இவனையும் உயிரோடு விடேன். இன்று இரவு இவன் ஈண்டு வருவான். இவனை அப்போது அழித்தல் வேண்டும் என்ற வஞ்சம் நெஞ்சில், எழ, விஞ்சையன், புற்றில் அடங்கும் அரவுபோல், மன்றத்தின் உட்புகுந்து ஒருவரும் அறியாவாறு மறைத் திருந்தான்.

இரவு வந்தது. ஊரெல்லாம் உறங்கிவிட்டது. மணிமேகலைபால் கொண்ட மாருக்காதலால் உறக்கம் இன்றிக் கிடந்த உதயகுமரன், இடையாமத்தில் எழுத் தான்; யானவேட்டை விரும்பி எழும் புலியேபோல் அரண்மனை வாயிலைக் கடந்து வெளிவந்தான். அம்பலம் அடைந்தான். பாம்புறையும் புற்றிடையே புகுவான்போல், அடிமேல் அடியிட்டு அம்பலத்தின் உட்புகுந்தான். அவன் வரும் அரவம் கேட்டிலதாயினும், அவன் மார்பிற் கிடந்து நாறும் சந்தனத்தின் மணம் அவன் வருகையை பலர் அறியத் தூற்றி விட்டது. அவன் வருகையை எதிர் நோக்கி விழித்திருந்த விஞ்சையன், அவன் வருகையை அறிந்து கொண்டான். உடனே படம் விரித்தெழும் பாம்புபோல் எழுந்து, அவன்பின் சென்று, தோள் துணிந்து வீழுமாறு, அவனே வாளால் வெட்டிச் சாய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/73&oldid=561448" இலிருந்து மீள்விக்கப்பட்டது