பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கினிய காட்சியைக் கண்டு களிப்புற்றான். “உன் கையில் இருப்பதோ ஒரு கலம்; ஆனால் அதனால் பசிதீரப் பெறுவோரோ பலர்; உன்னைப் பற்றி வருத்திய யானைத்தீநோயின் கொடுமை கண்டு உன்பால் பரிவுகொண்டவானவர், இவ்வற்புதப் பாத்திரத்தை உணக்கு அளித்தார் கொல்லோ?” என வினவியவாறே அவளை அணுகி நின்றான்.

மணிமேகலை காயசண்டிகையை அறிவளேயல்லது, காஞ்சனனே அறியாளாதலின், அவனுக்கு விடையளித்திலள். அவன் அணுக அணுக, அவள் அகன்று அகன்று நின்றாள். அவனே விடுத்து, அவன் வருதற்கு. முன்னரே ஆங்கு வந்திருந்த அரசன் மகனை அணுகினாள். அவனுக்குத் தெருவூடே செல்லும் நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி, இளமைப் பருவத்தில் அம்முதியாள் பெற்றிருந்த பேரின்ப நிலையினை நினைவூட்டி நிலையாமை இயல்பினை அவன் உளங்கொள உணர்த்தத் தொடங்கினாள். ஆனால், அவ்வறிவுரை கேட்கும் அவன் அறிவு தெளிந்திலது. “இவள் மணிமேகலையே; நம்மை ஏமாற்றவே இவ்வுருக் கொண்டு திரிகிறாள்; அயலான் ஒருவன் இவளுக்குப் பண்டே அறிமுகமாகியுள்ளான் போலும், இப்புதியான் அவன் போலும். இவ்விருவர் தம் உறவினை இரவு வந்து காண்பேன்” என உளத்திடை எண்ணி அகன்றான்.

காஞ்சனன் மணிமேகலையைத் தன் மனைவியென்றே கருதினனாதலின், மணிமேகலை தன்னை மதியாது மன்னன்