பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

செல்லினோ வேந்தன் மகன் விடான். இவ்விடர் நிலையை எவ்வாறு தவிர்ப்பேன்" என எண்ணிக் கலங்கினாள். இறுதியில் ஒரு வழி புலப்பட்டது. “காயசண்டிகையை இவ்வூரார் அனைவரும் அறிவர்; அவள் பசி நோயை அறியும் இவ்வூரார், அவள் பசி தீரப்பெற்றுப் புகார் நகர் நீங்கிப் போய்விட்டதை அறியார். ஆகவே அவள் வடிவை நான் மேற்கொண்டால், என்னை அவ்வுருவில் காணும் எவரும், என்னைக் காயசண்டிகையென்றே கருதுவர். காவலன் மகனும் என்னைக் கைப்பற்றக் கருதான்” எனத் துணிந்தாள். உடனே மணிமேகலா தெய்வம் அறிவித்த மந்திர ஆற்றலால் காயசண்டிகை வடிவு கொண்டு வெளியே வந்தாள். மன்னன் மகன், அவளைக் காயசண்டிகை எனவே மயங்கவுணர்ந்து. மன்றம் விட்டகன்றான்.

மணிமேகலை, அன்றுதொட்டு, காயசண்டிகை வடிவிலேயே காலங்கழித்து வந்தாள். அவ்வடிவோடே சென்று ஆங்காங் குள்ளாரின் பசிப்பிணியைப் போக்கி வந்தாள். காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் அனைவரும் அவளைக் காயசண்டிகை என்றே கருதினர்.

இந்நிலையில், காயசண்டிகையைத் தேடித் திரிந்த காஞ்சனன், ஒருநாள், மணிமேகலையை ஊரம்பலத்தில் கண்டான். அவளைத் தன் மனைவியென்றே மனத்திடைக் கொண்டான். அவளை அணுகினான். தீராப்பசி நோயால் துயர் உற்றவள் தன்னைச் சூழ்ந்து நிற்கும் பல்லோர் பசியைப் போக்கும் காண்டற்