பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தாள். அச்செய்தியை, அந்நாடாளும் அரசன் மகன் உதயகுமாரன் அறிந்தான். மணிமேகலைபால் மாறாக் காதல் கொண்டவன் அவன். அவள் அன்பைப் பெற முன்னம் ஓர் முறை முயன்றும், மணிமேகலா தெய்வத்தின் குறுக்கீட்டால், காரியம் கைகூடப் பெறாது கலங்கி வாழ்பவன் அவன். அவன், மணிமேகலை, இப்போது எவரும் எளிதில் புகவல்ல ஊரம்பலத்தில் உள்ளாள் என அறிந்ததும், அவளைக் கைப்பற்றி வர ஆங்கு விரைந்தான். மணிமேகலையைக் கண்டு நெகிழ்ந்தது அவன் மனம். அவளை அணுகி, “நல்லாய்! தவநெறி மேற்கொண்டது தக்கதாமோ? நனியிளமைப் பருவத்தளாய நினக்கு அது நன்றாமோ?” என வினவி நின்றான். போன பிறவியில் அவன் தன் கணவன் என்பதை அறிந்து, அவள் மனமும் அவன்பால் நெகிழ்ந்தது. ஆயினும், அதை ஒருவாறு அடக்கிக்கொண்டு, “அரசன் மகனே! மக்கள் யாக்கை, பிணி மூப்புற்று அழியவல்லது என அறிந்து, அறநெறி மேற்கொண்டேன்” என விடையளித்தாள். பின்னர், அவனுக்கு அணித்தாக, மேலும் ஆங்கிருந்தால், அவன் அடாதது புரிதலும் உண்டாம். தன் உள்ளம் அவன் ஆசைக்கு அடிமையாதலும் நேர்ந்துவிடும் என நினைந்து நடுங்கினாள். அதனால், அரசன் மகன் ஆண்டிருக்க அவள் ஆங்கிருந்த சம்பாபதி கோயிலுள் புகுந்து கொண்டாள்.

கோயிலுட் புகுந்துகொண்ட மணிமேகலை, எப்போதும் ஈண்டே அடையுண்டு கிடத்தல் இயலாது. வெளியே