பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

பறந்து செல்லும் காயசண்டிகையைப் பற்றி யீர்த்துத் தன் வயிற்றகத்தே அடக்கிக் கொண்டாள்.

வளமார் வாழ்வு வாழ வேண்டும்; வாழ்க்கையின் வனப்பினைக் காணவேண்டும் எனும் வேட்கை மிகுதியால், கொடிய யானைத்தீநோயைப் பன்னிரண்டாண்டளவும் பொறுத்து நோயுற்று, வேற்று நாட்டில் வாழ்ந்து வருந்தியவள், அப்பேரின்ப வாழ்வு தன்னை அணுகும் நிலை வந்துற்ற அந்நிலையில், வித்தாகடிகையின் வயிற்றகத்தே சிறைப்பட்டு அழிந்துவிட்டாள். அந்தோ! அவள் நிலை அவலம்! அவலம்!

காயசண்டிகைக்கு நேர்ந்த கதியைச் காஞ்சனன் அறியான். அவள் வரும் நாளை ஆவலோடு எதிர்நோக்கிக், காலக்கழிவைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தான். பன்னிரண்டு ஆண்டுகளும் கழிந்துவிட்டன. ஆயினும் அவள் வந்திலள். காஞ்சனுக்குக் கவலை மிகுந்தது. உடனே காவிரிப்பூம்பட்டினம் வந்து சேர்ந்தான். ஆங்குப் பூத சதுக்கம் நாற்சந்திகள், உவவனம் முதலாம் பொழில்கள், பொது வில்லங்கள் பட்டி மண்டபம் முதலாம் மன்றங்கள், மாதவர் உரையும் தவப்புள்ளிகள், நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயில் முதலாம் கோயில்கள் ஆகிய எங்கும் தேடித் திரிந்துகொண்டிருந்தான். நிற்க.

மணிமேகலை மன்றம் புகுந்து , பிச்சைப் பாத்திரம் கையில் ஏந்தி மக்கள் பசியைத் தீர்த்துக் கொண்டிருந்